தமிழ்நாடு அரசு, விவசாயத்தில் தொழில்நுட்ப புதுமைகளை உருவாக்கும் Agri-Tech ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.25 லட்சம் வரை திருப்பி செலுத்த வேண்டாத மானியம் வழங்குகிறது. இது இளம் தொழில்முனைவோரின் முதலீட்டு பயத்தை போக்கி, விவசாயத்தில் புரட்சி செய்ய ஊக்குவிக்கிறது.
தமிழ்நாட்டில் விவசாயம் என்றால் இன்னும் பாரம்பரிய முறைகள் மட்டுமே என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. ஆனால் அந்த எண்ணத்தை முற்றிலும் மாற்றும் வகையில், விவசாயத்தையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் Agri-Tech ஸ்டார்ட்அப்களுக்கு தமிழ்நாடு அரசு மிகப் பெரிய நிதி ஆதரவை அறிவித்துள்ளது. விவசாயத்தில் புதுமை, புதிய யோசனை, தொழில்நுட்ப தீர்வுகள் கொண்டு வர விரும்பும் இளம் தொழில்முனைவோருக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு ஆக அமைந்துள்ளது.
27
விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்பு தெரியுமா?
தமிழ்நாடு வேளாண்மை சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத் துறை, StartupTN அமைப்புடன் இணைந்து இந்த Agri-Tech Grant Support Scheme-ஐ செயல்படுத்துகிறது. விவசாய உற்பத்தி, மதிப்பூட்டல், சந்தைப்படுத்தல், டிஜிட்டல் தீர்வுகள், இயந்திரமயமாக்கல், ஸ்மார்ட் ஃபார்மிங் போன்ற துறைகளில் புதுமைகளை உருவாக்கும் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
37
ரூ.25 லட்சம் வரை அரசு நிதி உதவி
இந்தத் திட்டத்தின் கீழ், ஆரம்ப நிலையில் இருக்கும் Early-stage Agri-Tech ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது. அதேபோல், தொழிலை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றுள்ள Scaleup stage ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.25 லட்சம் வரை அரசு நிதி உதவி வழங்கப்படுகிறது. இது கடன் அல்ல; திருப்பிச் செலுத்த வேண்டாத மானியத் தொகை என்பதே இதன் மிகப் பெரிய சிறப்பம்சம். இதனால் முதலீட்டு பயம் இல்லாமல், புதுமையான யோசனைகளை நடைமுறைப்படுத்த இளம் தொழில்முனைவோர் முன்வர முடியும்.
இந்த நிதி உதவியைப் பெற சில முக்கிய தகுதி நிபந்தனைகள் உள்ளன. விண்ணப்பிக்கும் நிறுவனம் DPIIT-ல் பதிவு செய்யப்பட்ட Startup ஆக இருக்க வேண்டும். நிறுவனத்தின் தலைமையகம் தமிழ்நாட்டில் இயங்க வேண்டும். அது Private Limited / LLP / Partnership நிறுவனமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரி லாபம் ரூ.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
57
இதெல்லாம் கட்டாயம்
விவசாய தயாரிப்புகள், செயல்முறைகள் அல்லது தொழில்நுட்ப புதுமைகளில் உண்மையாகவே செயல்பட்டு வர வேண்டும். ஏற்கனவே உள்ள தொழிலைப் பிரித்து உருவாக்கப்பட்ட நிறுவனம் ஆக இருக்கக் கூடாது என்பதும், அரசு நிலுவைத் தொகை அல்லது பிளாக் லிஸ்டில் பெயர் இல்லாததும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறைந்தது 51 சதவீத பங்குகள் இந்திய பங்குதாரர்களிடம் இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க நிபந்தனையாகும்.
67
விண்ணப்பிக்கும் முறை மிகவும் எளிமையானது
விருப்பமுள்ள ஸ்டார்ட்அப்கள் form.startuptn.in/AGF என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான விவரங்களை நிரப்பி agrimarkstartuptech@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் வழிகாட்டுதல் மற்றும் சந்தேகங்களுக்கு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேளாண் வணிக துணை இயக்குநர் (District Deputy Director of Agriculture – Agri Business) அலுவலகத்தை நேரடியாக அணுகலாம்.
77
Agri-Tech ஸ்டார்ட்அப்களுக்கு ஒரு பெரிய திருப்புமுனை
முடிவாக, விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றவும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அரசு எடுத்து வரும் இந்த முயற்சி, Agri-Tech ஸ்டார்ட்அப்களுக்கு ஒரு பெரிய திருப்புமுனை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. “விவசாயத்தில் யோசனை இருந்தால் போதும்” என்ற நிலையை உருவாக்கும் இந்த அரசு சப்போர்ட்டை, புதிய தலைமுறை தொழில்முனைவோர் தவற விடாமல் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.