UPI சர்க்கிள் தெரியுமா? ஒரே வங்கிக் கணக்கை குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தலாம்!

First Published | Sep 8, 2024, 11:38 AM IST

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) டிஜிட்டல் பேமெண்ட் வசதியை மேம்படுத்தும் நோக்கில் "UPI சர்க்கிள்" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம் மூலம் பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

UPI Circle

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) டிஜிட்டல் பேமெண்ட் வசதியை மேம்படுத்தும் நோக்கில் "UPI சர்க்கிள்" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம் மூலம் பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

UPI Circle

UPI சர்க்கிள் அம்சத்தின் கீழ் இணைக்கப்படும் குடும்பத்தினரும் நண்பர்களும் முதன்மை பயனரின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும். சொந்த வங்கிக் கணக்கு இல்லாதவர்கள், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை பயன்படுத்தத் தயங்குபவர்கள் மத்தியில் UPI பயன்பாட்டை விரிவுபடுத்த இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

Latest Videos


UPI Circle

NPCI வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் UPI சர்க்கிள் பற்றி விவரித்துள்ளது. அதன்படி, முதன்மை பயனர்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் போன்ற இரண்டாம் நிலை பயனர்களுக்கு தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் அங்கீகாரத்தை வழங்கலாம். அவர்கள் முதன்மை பயனரின் கணக்கிலிருந்து நேரடியாக பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.

UPI Circle

இந்த அம்சம் சிறுவர்களிடம் டிஜிட்டல் பேமெண்ட் வசதியை வழங்கத் தயங்கும் பெற்றோர்களுக்கும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளத் தயங்கும் மூத்த குடிமக்களுக்கும் உதவும். இதேபோல தொழில்முனைவோர் தங்கள் ஊழியர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை நிர்வகிக்க அனுமதி வழங்கவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

UPI Circle

இந்த அம்சம் பல்வேறு பாதுகாப்பு அடுக்குகளுடன் வருகிறது. UPI சர்க்கிளில் சேர்க்கப்படும் இரண்டாம் நிலை பயனர்களுக்கு முதன்மை பயனர்கள் செலவு வரம்புகளை நிர்ணயம் செய்யலாம். ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்சம் எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று முதன்மை பயனர் முடிவுசெய்யலாம். "Spend With Limits" என்ற இந்த ஆப்ஷன் மூலம் இரண்டாம் நிலை பயனர்கள் கூடுதல் ஒப்புதல் தேவையில்லாமல் வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்குள் பணம் செலுத்த முடியும். அதே சமயம் ஒவ்வொரு கட்டணத்தையும் முதன்மை பயனர் பார்த்து அங்கீகரிக்கும் வகையில் "Approve Every Payment" என்ற ஆப்ஷனும் இருக்கிறது.

UPI Circle

NPCI நிர்ணயித்துள்ள வரம்பின்படி, இரண்டாம் நிலை பயனர்கள் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக ரூ.15,000 வரை செலவிடலாம். ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்சமாக ரூ.5,000 வரை மட்டுமே செலவிட முடியும். மேலும், புதிதாக இணைக்கப்பட்ட இரண்டாம் நிலை பயனருக்கு முதல் 24 மணிநேரத்திற்கு ரூ.5,000 செலவு வரம்பு இருக்கும்.

முதன்மை பயனர் இரண்டாம் நிலை பயனர்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் வசதியும் உள்ளது. முதன்மைப் பயனர் வெவ்வேறு இரண்டாம் நிலைப் பயனர்களுக்கு வெவ்வேறு அதிகபட்ச வரம்புகளை (ரூ.15,000க்குள்) நிர்ணயம் செய்யலாம்.

UPI Circle

"யுபிஐ பயனர்களில் சுமார் 6% பேர் அதிக எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகளைச் செய்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் அவர்கள் மற்றவர்களின் சார்பாகவும் பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். இந்தப் புதிய அம்சம் அத்தகைய முதன்மைப் பயனருக்கு கூடுதல் வசதியைக் கொடுக்கும்" என்று NPCI கூறுகிறது.

UPI Circle

ஒரு முதன்மைப் பயனர் 5 இரண்டாம் நிலைப் பயனர்களைச் சேர்க்க முடியும். ஆனால், இரண்டாம் நிலைப் பயனர் ஒரு முதன்மை பயனரை மட்டுமே ஏற்க முடியும். முதன்மைப் பயனர் எந்த நேரத்திலும் இரண்டாம் நிலை பயனரை நீக்கிவிடலாம்.

click me!