Today Gold Rate In Chennai: தங்கம் விலையில் கடந்த இரண்டு நாட்களாக எந்த மாற்றமும் இல்லை. நேற்று சவரன் ரூ.53,440-க்கு விற்பனையானது. இன்றும் அதே விலையே நீடிக்கிறது.
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இது அனைவரும் அறிந்தது. குறிப்பாக தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
25
Chennai Gold Rate
இந்நிலையில் கடந்த ஜூலை 17-ம் தேதி வரை தங்கம் விலை உச்சத்தில் இருந்து வந்த நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை சரசரவென குறைந்து வந்தது. பின்னர் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.
35
Yesterday Gold Rate
நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.53,440-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.6,680க்கு விற்பனையானது.
45
Today Gold Rate
இன்றைய (செப்டம்பர் 08) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.53,440-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.6,680-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,135-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,080-ஆக விற்பனையாகிறது.
55
Today Silver Rate
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.89.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.89,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.