186% சம்பள உயர்வு? 8வது ஊதியக் குழு அப்டேட்டால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

Published : Dec 16, 2024, 08:05 PM ISTUpdated : Dec 16, 2024, 08:34 PM IST

மத்திய அரசு ஊழியர்கள் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக ஊதிய மாற்றத்துக்காகக் காத்திருக்கின்றனர் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அரசு கடைசியாக ஜனவரி 2016 இல் ஊதியங்களை மாற்றம் செய்தது. தற்போது மிக முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

PREV
112
186% சம்பள உயர்வு? 8வது ஊதியக் குழு அப்டேட்டால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி
DA Hike for Central Govt Employees

2024 ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில், 8வது ஊதியக் குழு குறித்த விவாதங்கள் வேகமெடுத்து வருகின்றன. ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

212
DA Hike

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, 8வது மத்திய ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

312
Central Govt Employees

புதிய ஊதியக் குழுவை அமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு மத்தியில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2016 முதல் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக ஊழியர்கள் ஊதிய மாற்றத்துக்காகக் காத்திருப்பதாக சங்கம் எடுத்துரைத்தது.

412
India Pay Commission News

கொரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், அதிக பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் காரணமாக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

512
8th Pay Commission

சராசரியாக 4% முதல் 7% வரை, தோராயமாக 5.5% பணவீக்கத்துடன், பணத்தின் உண்மையான மதிப்பு கடந்த ஒன்பது ஆண்டுகளில், குறிப்பாக கோவிட்-க்குப் பிந்தைய காலத்தில் கணிசமாகக் குறைந்துள்ளது.

612
Govt Employees

மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய அமைப்பை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் மாற்றம் செய்யுமாறு ஊழியர் அமைப்பு பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கான சிறந்த 5 பைக்குகள்; 2024ன் முழு லிஸ்ட் இதோ!

712
8th Pay Commission Update

8வது ஊதியக் குழு: புதிய ஊதியக் குழுவை அமைக்க தற்போது எந்தத் திட்டமும் இல்லை என்று மத்திய நிதியமைச்சகம் சமீபத்தில் தெரிவித்தது.

812
Fitment

தேசிய கூட்டு ஆலோசனைக் குழுவின் (NC-JCM) ஊழியர் பிரிவின் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா, வரவிருக்கும் 8வது ஊதியக் குழு "குறைந்தபட்சம் 2.86" என்ற பிட்மென்ட் காரணியை பரிந்துரைக்கும் என்று முன்னர் கூறியிருந்தார்.

912
Salary Revision

8வது ஊதியக் குழு செயல்படுத்தப்பட்டு, அரசு இந்த பிட்மென்ட் காரணியை ஏற்றுக்கொண்டால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000ல் இருந்து ரூ.51,480 ஆக உயரும்.

1012
Fitment Factor Calculation

இது 186% சம்பள உயர்வை பிரதிபலிக்கும். அதேபோல், மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000ல் இருந்து ரூ.25,740 ஆக அதே பிட்மென்ட் காரணியுடன் உயரும்.

1112
Salary Update

இருப்பினும், 8வது ஊதியக் குழுவை அரசு நிரந்தரமாகக் கைவிட்டு, சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான புதிய முறையை அறிமுகப்படுத்தலாம் என்று சில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

1212
Central Govt

ஏனெனில் ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்களின் எதிர்கால சம்பளத்தை நிர்ணயிக்கும்.

ரூ.1,000 இருந்தா போதும்.. தமிழ்நாட்டில் இந்த இடங்களுக்கு மறக்காம விசிட் அடிங்க!

 

Read more Photos on
click me!

Recommended Stories