அம்பானி, அதானி மீது இடியை இறக்கிய ப்ளூம்பெர்க்! எலைட் லிஸ்டில் இடம் கிடையாது!

First Published | Dec 16, 2024, 5:40 PM IST

Bloomberg Billionaires Index: இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரர்களாக இருக்கும் தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி இருவரும் 2024ஆம் ஆண்டிற்கான ப்ளூம்பெர்க் பில்லியனர்களின் எலைட் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளனர்.

Mukesh Ambani

இந்தியாவின் பணக்கார பில்லியனர்களில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இருவரும் இந்த ஆண்டிற்கான ப்ளூம்பெர்க்கின் 100 பில்லியன் டாலர் கிளப்பில் இருந்து வெளியேறியுள்ளனர். பல வணிக சவால்களால் இந்த சரிவு தவிர்க்கமுடியாததாக ஆகியிருக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Gautam Adani

இருப்பினும், ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் பணக்காரர்களின் நிகர சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. முதல் 20 கோடீஸ்வரர்கள் ஜனவரி 2024 முதல் 67.3 பில்லியன் டாலர் சொத்து சேர்த்துள்ளனர். ஷிவ் நாடார் (10.8 பில்லியன் டாலர்) மற்றும் சாவித்ரி ஜிண்டால் (10.1 பில்லியன் டாலர்) ஆகியோர் அதிக லாபம் ஈட்டியவர்களில் முன்னிலையில் உள்ளனர்.

Tap to resize

Bloomberg $100 billion club

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, அம்பானியின் ஆற்றல் மற்றும் சில்லறை வர்த்தகத் தொழில்களில் ஏற்பட்ட சரிவு காரணமாக அவரது சொத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ப்ளூம்பெர்க் பில்லியனர் இண்டெக்ஸ் (பிபிஐ) பட்டியலின்படி, ஜூலை மாதம் 120.8 பில்லியன் டாலராக இருந்த அவரது சொத்துக்கள், ​​டிசம்பர் 13ஆம் தேதி நிலவரப்படி 96.7 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

Bloomberg Billionaires Index

அதானிக்கு இருக்கும் பிரச்சனைகள் இன்னும் ஆழமானவை. அமெரிக்காவின் நீதித்துறை (DoJ) விசாரணையில் இருந்து அவரது குழுமம் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. ஜூன் மாதத்தில் 122.3 பில்லியன் டாலராக இருந்த அதானியின் சொத்து மதிப்பு, இப்போது 82.1 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது என்று பிபிஐ தெரிவித்துள்ளது.

World's Richest in 2024

இந்த வீழ்ச்சியின் காரணமாக அதானி, அம்பானி இருவரும் 100 பில்லியன் டாலருக்கு மேல் சொத்துக்களைக் கொண்டவர்கள் அடங்கிய எலைட் சென்டிபில்லியனர்கள் கிளப்பில் இருந்து வெளியேறியுள்ளனர் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

Latest Videos

click me!