கிரெடிட் கார்டை "சும்மா" வைத்திருந்தாலே பில் கட்ட வேண்டிய நிலை வரும் தெரியுமா? அதனை தடுக்கலாம் ஈசியா!

Published : Jul 08, 2025, 11:16 AM ISTUpdated : Jul 08, 2025, 11:18 AM IST

கிரெடிட் கார்டை பயன்படுத்தாமல் இருப்பது உங்கள் சிபில் ஸ்கோரை பாதிக்கலாம். செயலற்ற கணக்காக மாறுவது, கிரெடிட் லிமிட் குறைவது, மற்றும் ஆண்டுக் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். 

PREV
16
அதிகரிக்கும் கிரெடிட் கார்டு பயன்பாடு

இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் அண்மை புள்ளிவிவரங்கள் இதனை உறுதி செய்கின்றன. 2024-25 நிதியாண்டில் கிரெடிட் கார்டு செலவுகள் 15% அதிகரித்து சுமார் ₹21 லட்சம் கோடிக்கு மேல் சென்றுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங், அவசரகால செலவுகள் போன்றவற்றுக்கு மக்கள் அதிகம் கிரெடிட் கார்டுகளை சார்ந்திருக்கின்றனர். ஆன்லைன் சந்தைகளும் இதனை ஊக்குவிக்க விதவிதமான சலுகைகள் வழங்குகின்றன. சிலர் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தாமல், “ஏதாவது சமயத்தில் தேவைப்படும்” என்று வைத்திருப்பார்கள். ஆனால், அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் நீண்ட காலம் வைத்திருப்பது சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். முக்கியமாக, அது உங்கள் சிபில் ஸ்கோருக்கு பாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது.

26
செயலற்ற கணக்காக மாற்றும் அபாயம்

கிரெடிட் கார்டில் எந்த பரிவர்த்தனையும் நடக்காமல், நீண்ட காலம் பயன்பாடின்றி இருந்தால், அந்தக் கணக்கு ‘செயலற்றது’ எனக் கருதப்படுகிறது. தொடர்ந்து செயல்பாடின்றி இருந்தால், issuing bank உங்கள் கணக்கை மூட வாய்ப்பு உண்டு. எனவே இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

36
கிரெடிட் லிமிட் குறையும்

கிரெடிட் கார்டை பயன்படுத்தாமல் வைத்திருந்தால், உங்கள் ஒட்டுமொத்த கிரெடிட் லிமிட்டில் குறைப்பு செய்யப்படலாம். அதன் விளைவாக, உங்கள் ‘கடன் பயன்பாட்டு விகிதம்’ (Credit Utilization Ratio) அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது உங்கள் சிபில் ஸ்கோரில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறக்க கூடாது.

46
சிபில் ஸ்கோர் வளர்ச்சியை mis பண்ணக்கூடும்

கிரெடிட் கார்டை வினியோகமாகப் பயன்படுத்தி, மாதந்தோறும் பில் கட்டணம் சரியாக செலுத்துவது நல்ல கிரெடிட் வரலாறு உருவாக்க உதவும். இதன் மூலம் சிபில் ஸ்கோர் முன்னேறும். ஆனால், அதை முற்றிலும் பயன்படுத்தாமல் விட்டால், இந்த சாதகமான தாக்கத்தை இழந்துவிடுவீர்கள்.

56
ஆண்டுக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை

பல கிரெடிட் கார்டுகளில் ஆண்டுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில கார்டுகளுக்கு, ஒரு குறிப்பிட்ட அளவு செலவு செய்தால் அந்த கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். ஆனால், நீங்கள் அதை எந்த பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தாமல் இருந்தால், ஆண்டுக் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் வரும். அத்துடன், எந்தப் பயனும் கிடையாது.

66
எப்போது, எப்படிப் பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

கிரெடிட் கார்டை முறையாக, கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துவது முக்கியம். குறைந்தபட்சம் சில மாதங்களுக்கு ஒரு முறை சிறிய பரிவர்த்தனைகள் செய்து, பில்களை நேரத்துக்கு முன் செலுத்துவது நல்ல பழக்கம். இதனால் உங்கள் சிபில் ஸ்கோர் பாதுகாக்கப்படும் மற்றும் உங்களின் நம்பகத்தன்மை பராமரிக்கப்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories