தற்போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 20 சதவீத வரியை விதித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா கூடுதலாக 34 சதவீத வரியைச் சேர்த்தது, இது ஐபோன் விலைகளில் கடுமையான அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இந்த வரி விதிப்பு தொடர்ந்து நடைமுறையில் இருந்தால், எதிர்காலத்தில் ஐபோன் விலைகள் 2,000 அமெரிக்க டாலருக்கு மேல் (இந்திய மதிப்பில் ரூ.1.71,731) உயரக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.
அறிக்கைகளின்படி, ஐபோன் 16 இன் அடிப்படை மாடலின் விலை தற்போது அமெரிக்காவில் 799 டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.68,590) உள்ளது. ஆனால் இது 43 சதவீதம் வரை விலை அதிகரித்து 1,142 டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.98,050) ஆக உயரக்கூடும். மேலும் தற்போது 1,599 டாலர்களுக்கு (ரூ.1,37.297) விற்கப்படும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் சுமார் 2,300 டாலர்களாக (ரூ.1,97,502) உயரக்கூடும்.
சீனா மீது கூடுதலாக 50% வரி! போட்டுத் தாக்கும் டொனால்ட் டிரம்ப்! 1 நாள் கெடு விதிப்பு!