அடிதூள்! ரூ.2,680 குறைந்த தங்கம் விலை! குஷியில் நகைப்பிரியர்கள்!
தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில், கடந்த 5 நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 வரை குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்ட நிலையில், கடந்த 5 நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 வரை குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கம்
தங்கம் விலை கடந்த 3 மாதங்களில் ரூ.10,000 முதல் ரூ.15,000 முதல் உயர்ந்து பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனால் நடுத்தர மக்கள் நகை வாங்க முடியாத சூழல் நிலவி வந்தது. அதாவது ஒரு சவரன் வரலாறு காணாத வகையில் உயர்ந்து ரூ.69,000ஐ நெருங்கி நகைப்பிரியர்களை பீதி அடைய செய்தது. வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் உயரும் என கூறப்பட்டு வந்தது.
தங்கம் விலை உயர்வுக்கு என்ன காரணம்?
தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் உலக அளவில் தங்கத்தின் மீதான தேவை அதிகரிப்பதே காரணம். அதன் காரணமாக சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப அதன் விலை ஏற்ற இறக்குத்துடன் இருப்பது வழக்கம். இருப்பினும் இந்தியாவில் அண்மையில் வரலாறு காணாத வகையில் தங்கம் புதிய உச்சத்தை எட்டியது . இதற்கு உலக நாடுகளிடையே நிலவும் வர்த்தக ரீதியான தாக்கமும் முக்கிய காரணம் என கூறப்பட்டு வந்தது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்
இந்நிலையில் பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்தார். அதேபோல பல்வேறு நாடுகள் தங்கத்தின் மீதான முதலீட்டை திரும்ப பெறுவது போன்ற காரணங்களால் தற்போது தங்கம் விலை சரசரவென குறைந்து வருகிறது.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி 2 ரூபாய் உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
நேற்றைய தங்கம் விலை
கடந்த வியாழக்கிழமை சவரனுக்கு 1,280 ரூபாயும், வெள்ளிக்கிழமை ரூ.720, சனிக்கிழமை ரூ.200, நேற்று ரூ.480 குறைந்து நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தங்கம் சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.66,280-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.8,285-க்கு விற்பனையானது.
இன்றைய தங்கம் விலை
இன்று (ஏப்ரல் 08) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.65,800-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.8,225-க்கு விற்பனையாகிறது.
இதையும் படிங்க: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு! எரிய வேண்டியது அடுப்பா? வயிறா? சொல்வது யார் தெரியுமா?
கடந்த 5 நாட்களில் ரூ.2,680 குறைந்த தங்கம்
24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 8,972-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.71,776-ஆக விற்பனையாகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.2,680 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.