உரிமைத் தொகை திட்டத்திற்கே டஃப் கொடுக்கும் திட்டம்! விண்ணப்பிப்பவர்களுக்கு மாதம் ரூ.1500

ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ள நிலையில் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

magalir urimai thogai

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு அரசு, ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகள் பயனடைகிறார்கள். 

திட்டத்தின் பெயர்:
ஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியத் திட்டம். 

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை:
இந்தத் திட்டத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. 
 

Urimai Thogai

திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள்:
40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பலன் அடைவதற்கு தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி உதவி:
ஒவ்வொரு மாதமும் ரூ. 1,500 ஓய்வூதியமாக வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை:
திருநங்கைகள் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்திட “திருநங்கைகள்” என்னும் தனிப்பட்ட கைப்பேசி செயலி மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். 
 


Urimai Thogai

தேவைப்படும் ஆவணங்கள்:
திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதார் அட்டை, வயதுச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை. 

தொடர்புக்கு:
திட்டத்தில் இணைந்து மாதம் தோறும் உதவித் தொகை பெற விரும்பும் பயனாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் பயன்பெற விருப்புபவர்கள் உடனடியாக தங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Latest Videos

click me!