பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு. குறிப்பிட்ட இந்த் தேதிக்குள் பான் மற்றும் ஆதாரை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது, இல்லையெனில் பான் செயலிழந்துவிடும்.
வங்கி வேலைகள் முதல் அனைத்து விதமான அலுவலக வேலைகளுக்கும் பான் கார்டு அவசியம் ஆகும். தற்போது பான் கார்டு குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சென்ட்ரல் போர்ட் ஆஃப் டைரக்ட் டாக்ஸஸ் இதனை அறிவித்துள்ளது.
25
PAN Aadhaar Link
சில குறிப்பிட்ட பான் கார்டு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31, 2025-க்குள் பான் மற்றும் ஆதார் இணைக்க வேண்டும் என CBIT தெரிவித்துள்ளது. இல்லையெனில் அவர்களின் பான் கார்டு செயலிழந்துவிடும்.
35
PAN Card
ஆதார் எண்ணுக்கு பதிலாக ஆதார் சேர்க்கை ஐடியை பயன்படுத்தி பான் உருவாக்கியவர்கள் இந்த விதிமுறையை பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் இணைக்கவில்லை என்றால், எந்த நிதி பரிவர்த்தனைக்கும் பான் பயன்படுத்த முடியாது.
45
PAN link 2025
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு பான் மற்றும் ஆதாரை இணைக்க ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். ஆன்லைனில் இணைக்க, வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று அறிவுறுத்தல்களின்படி படிவத்தை நிரப்பவும்.
55
Aadhaar PAN Update
இதை இணைக்க NSDL மற்றும் UTIITSL-ன் அருகிலுள்ள சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். இணைப்பு- I படிவத்தை நிரப்ப வேண்டும். இதை விரைவாக செய்யுங்கள். இல்லையெனில் பான் ரத்து செய்யப்பட்டால் பொருளாதார ரீதியாக சிரமப்படலாம்.