ரயில் டிக்கெட் ரத்து செய்தால் பணம் கிடைக்காதா? ரயில்வே அதிரடி ரூல்.. ஏப்ரல் 1 முதல் ஆரம்பம்

Published : Mar 30, 2026, 05:18 PM IST

இந்திய ரயில்வே, டிக்கெட் ரத்து செய்வதற்கான விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகள். ரீஃபண்ட் தொகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

PREV
15
ரயில் டிக்கெட் ரத்து விதி மாற்றம்

இந்திய ரயில்வே பயணிகளுக்கான டிக்கெட் ரத்து விதிகளில் முக்கிய மாற்றங்களை வழங்குகிறது. ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிகள், கடைசி நேரத்தில் டிக்கெட் ரத்து செய்யும் பயணிகளுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக ரிஃபண்ட் தொடர்பான விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் முன்கூட்டியே கவனம் செலுத்த வேண்டும்.

25
8 மணி நேரம்

இன்றைய நிலையில் ரயில் பயணம் மிகவும் அதிகமாக உள்ளதால், பலர் முன்பதிவு செய்து பயணிக்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் திட்டமாற்றம் காரணமாக டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுவரை ரத்து செய்த நேரத்தைப் பொறுத்து பணம் திரும்ப கிடைத்தது. ஆனால் தற்போது அந்த விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

35
ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள்

புதிய விதிகளின்படி, ரயில் புறப்படும் நேரத்திற்கு 8 மணி நேரத்துக்குள் டிக்கெட் ரத்து செய்தால் எந்தத் தொகையும் திரும்பக் கிடைக்காது. முன்னர் இந்த வரம்பு 4 மணி நேரமாக இருந்தது. மேலும், 24 மணி நேரம் முதல் 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால், டிக்கெட் தொகையில் 50% மட்டுமே திரும்ப வழங்கப்படும்.

45
72 மணி நேரத்திற்கு முன் ரத்து

மேலும், 72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால், 25% கட்டணம் கழித்து மற்ற தொகை திருப்பி வழங்கப்படும். 72 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்தால், குறைந்த அளவு கட்டணம் கழித்து பின்னர் பணம் திரும்ப கிடைக்கும். இந்த மாற்றங்கள் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

55
ஏப்ரல் 1 முதல் 15 வரை

மேலும், இந்த புதிய விதிகள் ஏப்ரல் 1 முதல் 15 வரை அமல்படுத்தப்படும். இனி எந்த நிலையத்திலிருந்து டிக்கெட் ரத்து செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் புறப்படும் நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன் போர்டிங் ஸ்டேஷனை மாற்றும் வசதி உள்ளது. பயணிகள் இந்த புதிய விதிகளை அறிந்து செயல்பட்டால், தேவையற்ற நஷ்டங்களை தவிர்க்கலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories