
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளின் உயிர்களை பயங்கரவாதிகள் பறித்ததை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை நிறுத்தி வைப்பது இந்தியாவை எவ்வளவு பாதிக்கும்? இரு நாடுகளுக்கும் இடையே என்ன வகையான பொருட்கள் வர்த்தகம் செய்யப்பட்டன? இந்தியாவில் எந்தெந்த பொருட்கள் விலை உயர வாய்ப்புள்ளது? என்பது குறித்து பார்ப்போம்.
பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவுகள் நீண்ட காலமாகவே மோசமடைந்துள்ளன. கடந்த 2019 இல் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான வர்த்தகத்தில் இந்தியா பெரும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் படிப்படியாகக் குறைந்துள்ளது. தரவுகளின்படி, 2018-19 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் ரூ.4,370 கோடிக்கும் அதிகமாக இருந்தது. இருப்பினும், 2019-ல் புல்வாமா பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 200 சதவீத வரி விதித்தது.
இதனால் வர்த்தகத்தில் கூர்மையான சரிவு ஏற்பட்டது. 2019௨0 ஆன்டுகளி அட்டாரி தரைவழி துறைமுகம் வழியாக வர்த்தகம் ரூ.2,772 கோடியாகக் குறைந்துள்ளது. இந்த வர்த்தக தடையால் இந்தியாவை விட பாகிஸ்தான் தான் அதிகமாக பாதிக்கப்படும் பணவீக்கம் உச்சத்தில் இருப்பதால், பாகிஸ்தான் ஏற்கனவே நிதி நிலைமையில் போராடி வருகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களை பெரிதும் சார்ந்துள்ளது.
இந்தியாவை விட பாகிஸ்தானுக்கு அதிக பாதிப்பு
அத்தகைய சூழ்நிலையில், வர்த்தக உறவுகளின் முழுமையான முறிவு இந்தியாவை விட பாகிஸ்தானை அதிகம் பாதிக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக புள்ளிவிவரங்கள் இந்த வேறுபாட்டை எடுத்துக்காட்டுகின்றன. 2021-22 நிதியாண்டில், இந்தியா பாகிஸ்தானுக்கு 513.82 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது. அதே நேரத்தில் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்வது வெறும் அமெரிக்க டாலர்கள் மட்டுமே.
2022-23 ஆம் ஆண்டில், பாகிஸ்தானுக்கான ஏற்றுமதி 627.10 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இறக்குமதி 20.11 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் உயர்ந்தது. இருப்பினும், 2023-24 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி கணிசமாகக் குறைந்து 2.88 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இந்தியாவின் ஏற்றுமதி 1,180 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் உயர்ந்தது. பாகிஸ்தானுடனான இந்தியாவின் மொத்த வர்த்தகம் அதன் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் 0.06% க்கும் குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியா பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியை கணிசமாகச் சார்ந்து இல்லை என்பதைக் குறிக்கிறது. அதே வேளையில் பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து இறக்குமதியை அதிகம் நம்பியுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்: தர்பூசணி, முலாம்பழம், சிமெண்ட், கல் உப்பு, உலர் பழங்கள், கற்கள், சுண்ணாம்பு, பருத்தி, எஃகு, கண்ணாடிகளுக்கான ஒளியியல் பொருட்கள், கரிம இரசாயனங்கள், உலோக கலவைகள், தோல் பொருட்கள், தாமிரம், கந்தகம், துணிகள், செருப்புகள், முல்தானி மிட்டி (ஃபுல்லரின் மண்).
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள்: தேங்காய், பழங்கள், காய்கறிகள், தேநீர், மசாலாப் பொருட்கள், சர்க்கரை, எண்ணெய் வித்துக்கள், கால்நடை தீவனம், பால் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், மருந்துகள், உப்பு, மோட்டார் பாகங்கள், சாயங்கள், காபி.
பாகிஸ்தான் இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்தது பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் பாகிஸ்தானில் இருந்து வரும் மேற்கண்ட பொருட்களின் விலை இனிமேல் இந்தியாவில் சற்று உயர வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.