ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் (Stand Up India scheme)
உற்பத்தி, சேவைகள், வர்த்தகத் துறை மற்றும் விவசாயத்துடன் தொடர்புடைய செயல்பாடுகளில் பசுமைக் களத் திட்ட நிறுவனத்தை அமைப்பதற்காக பெண்கள், பட்டியலினத்தவர் (SC) அல்லது பட்டியல் பழங்குடி (ST) தொழில்முனைவோருக்கு வங்கிக் கடன்களை வழங்க நிதி அமைச்சகத்தால் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், பசுமைக் களத் திட்டத்தை அமைக்க ஒரு வங்கிக் கிளைக்கு குறைந்தது ஒரு பெண், பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி தொழில்முனைவோருக்கு அரசாங்கம் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கடன்களை வழங்கும். தனிநபர் அல்லாத நிறுவனங்களுக்கு, பங்குகளில் குறைந்தபட்சம் 51% ஒரு பெண், SC அல்லது ST தொழில்முனைவோருக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும்.