இந்திய பங்குச் சந்தையில் புதிய உயிரோட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது சமீபத்திய ஜிஎஸ்டி வரி மாற்றம். செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரும் இந்த இரண்டு-வரி அமைப்பு (5% மற்றும் 18%) பல துறைகளுக்கு ஆதரவாக அமையும் என நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, FMCG, காப்பீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருந்து மற்றும் ஆட்டோ துறைகள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. இதன் விளைவாக, முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 15 முக்கிய பங்குகளை பார்க்கலாம்.
25
நுகர்வோர் மற்றும் சில்லறை துறை
Britannia, Colgate, Nestle மற்றும் Tata Consumer போன்ற நிறுவனங்கள் உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நுகர்வோர் விருப்பப் பொருட்களின் தேவையில் நேரடி பலன்களை பெறும் என மோர்கன் ஸ்டான்லி மற்றும் CLSA ஆகிய தரகு நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. மேலும், Avenue Supermarts (DMart) மற்றும் Vishal Mega Mart போன்ற சில்லறை வர்த்தக நிறுவனங்களில் விற்பனை உயர்வு மற்றும் வருவாய் நிலைத்தன்மை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
35
உடை மற்றும் காப்பீட்டு துறை
Page Industries போன்ற ஆடை நிறுவனங்கள் நீண்டகால வளர்ச்சியைப் பெறும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், காப்பீட்டு துறையில் SBI Life, HDFC Life, Max Life போன்ற நிறுவனங்கள் ஜிஎஸ்டி விலக்கு காரணமாக குறைந்த விலையில் பிரீமியத்தை வழங்கும். இது வாடிக்கையாளர் நம்பிக்கையை அதிகரித்து, காப்பீட்டு சேவையின் விரிவை மேம்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மருந்து பங்குகள்
Waaree Energies மற்றும் Premier Energies போன்ற சூரிய ஆற்றல் நிறுவனங்கள், இந்தியாவின் அதிகரிக்கும் PV தேவையால் பெரும் நன்மைகளை பெறுகின்றன. இதேபோல், Lupin போன்ற மருந்து நிறுவனங்கள் US FDA ஒப்புதலால் அமெரிக்கா ஏற்றுமதியை விரிவாக்கும் வாய்ப்பு பெற்றுள்ளன. இந்த பங்குகளுக்கு நோமுரா வலுவான இலக்கு விலையை அறிவித்துள்ளது.
55
ஆட்டோ மற்றும் விமான துறையின் முன்னேற்றம்
Maruti Suzuki, புதிய EV மாடல்கள் மற்றும் SUV வாகனங்கள் அறிமுகப்படுத்துவதன் மூலம் விற்பனையில் பெரிய முன்னேற்றத்தைப் பெறும் என நோமுரா கணித்துள்ளது. InterGlobe Aviation (IndiGo) நிறுவனமும் விமான சேவைகள் விரிவாக்கம் மற்றும் MRO வசதி மூலம் வளர்ச்சியைத் தொடரும் என HSBC வலியுறுத்தியுள்ளது. இந்த தகவல்கள் பொது விழிப்புணர்விற்காக மட்டுமே. முதலீடு செய்வதற்கு முன்பு எப்போதும் நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.