TASMAC Revenue: மதுபான கடைகள் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது உத்தரபிரதேச மாநிலம். தமிழகம் எத்தனாவது இடம்.
தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானம் விற்பனை மூலம் மாநில அரசுகளுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. இதில் வரும் வருமானத்தை பொறுத்து தான் ஒரு சில மாநிலங்களில் அரசு இயந்திரமே இயங்குவதாக கூறப்படுகிறது. இதில், தமிழ்நாடும் அடங்கும். குஜராத், பீகார், நாகாலாந்து போன்ற மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இருந்து வருகிறது.
26
டாப் 10 மாநிலங்கள் எவை?
இந்நிலையில் நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடியும், வார இறுதி நாட்களில் சுமார் ரூ.120 கோடி அளவுக்கு தமிழ்நாட்டில் மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. அதுவும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற நாட்களில் டாஸ்மாக் வருமானம் இரட்டிப்பாகும். இதனால் இந்தியாவில் டாஸ்மாக் வருமானத்தில் தமிழ்நாடு முதலிடம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதலிடத்தில் இருப்பது உத்தரபிரதேச மாநிலம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மதுபானங்களில் அதிக வருமானத்தை ஈட்டும் டாப் 10 மாநிலங்கள் மற்றும் தமிழ்நாடு எத்தனையாவது இடம் என்பதை பார்ப்போம்.
36
தமிழ்நாடு எத்தனையாவது இடம்?
மதுபான கடைகள் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது உத்தரபிரதேச மாநிலம். இம்மாநிலத்தில் ஆண்டிற்கு ரூ. 50,000 கோடி வரை வருமானம் கொட்டுகிறது. அதேபோல் மதுபான கடைகளில் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் மாநிலங்களின் பட்டியலில் 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. ஆண்டிற்கு ரூ. 44,000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதிக வருமானத்தை ஈட்டும் மாநிலங்களில் 3வது இடத்தில் இருப்பது மகாராஷ்டிரா மாநிலம். இம்மாநிலம் ஆண்டிற்கு ரூ. 35,000 வரை வருமானம் வருகிறது. அதேபோல் மதுபான கடைகள் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் மாநிலங்களின் பட்டியலில் 4வது இடத்தில் இருப்பது கர்நாடகா. இம்மாநிலத்தில் ரூ. 30,000 கோடி வரை வருமானம் ஈட்டுப்படுகிறது.
56
7வது இடத்தில் ஆந்திரா
சுமார் 22,000 கோடிகளுடன் 5வது இடத்தில் இருப்பது மேற்கு வங்கம் மாநிலம். 20,000 கோடிகளுடன் தெலுங்கானா மாநிலம் 6வது இடத்தில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மதுபான கடைகள் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் மாநிலங்களின் பட்டியலில் 7வது இடத்தில் இருப்பது ஆந்திர பிரதேசம். இம்மாநிலம் ஆண்டிற்கு சுமார் 25,000 கோடி வரை வருமானம் கொட்டுகிறது.
66
10ம் இடத்தில் ஹரியானா
மேலும் மதுபான விற்பனை மூலம் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் 8ம் இடத்தில் ராஜஸ்தான் மாநிலம் உள்ளது. ஆண்டிற்கு 16,000 முதல் 18,000 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. ஆண்டிற்கு 13,000 முதல் 15,000 கோடி ரூபாய் வருமானத்துடன் மத்திய பிரதேச மாநிலம் 9வது இடத்தில் உள்ளது. மதுபான விற்பனை மூலம் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் 10ம் இடத்தில் ஹரியானா மாநிலம் உள்ளது. ஆண்டிற்கு 12,000 முதல் 14,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.