சமையலுக்கு இனி கவலை இல்லை! போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.! எந்தெந்த காய்கள் என்ன விலை?

Published : Apr 08, 2026, 08:37 AM IST

காய்கறிகளை அதிகம் வாங்குகிறார்களோ இல்லையோ பை நிறைய தக்காளி, வெங்காயத்தை அதிகளவில் வாங்கி செல்வது வழக்கம். மேலும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.

PREV
16
ருசியை அள்ளிக்கொடுக்கும் தக்காளி, வெங்காயம்

சமையலுக்கு எவ்வளவு காய்கறிகள் போட்டு செய்தாலும் ருசியை அள்ளிக்கொடுப்பது தக்காளி, வெங்காயம். அதாவது இந்த இரண்டும் சமையலுக்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ரசம் முதல் பிரியாணி வரை இந்தியாவில் அனைத்து வகையான உணவு தயாரிப்புகளிலும் வெங்காயம், தக்காளி பயன்படுத்தப்படுவதால் இதன் தேவை மிக அதிகமாக உள்ளது.

26
பருமழை காலத்தில் உச்சம்பெறும் வெங்காயம்

காய்கறிகளை அதிகம் வாங்குகிறார்களோ இல்லையோ பை நிறைய தக்காளி, வெங்காயத்தை அதிகளவில் வாங்கி செல்வது வழக்கம். இதன் காரணமாகவே லாரியில் மூட்டை மூட்டையாக வெங்காயமும், பெட்டி பெட்டியாக தக்காளி சந்தையில் அதிகளவில் குவிந்து வருகின்றது. மேலும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. பருவமழை காலத்தில் மட்டும் தக்காளி, வெங்காயம் விலை உச்சப்பெறும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

36
போட்டுக்கொண்டு குறையும் தக்காளி, வெங்காயம்

இந்நிலையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி மற்றும் வெங்காயம் விலை போட்டி போட்டு குறைந்து வருகிறது. அதாவது சிறிய அளவிலான தக்காளி 6 முதல் 8 கிலோ 100 ரூபாய்க்கும், அடுத்த ரக தக்காளி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், தரமான தக்காளி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் ஒரு கிலோ வெங்காயம் 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

46
கோயம்பேடு காய்கறி சந்தை

இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை என்பதை பார்ப்போம். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 26 முதல் 33 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 49 முதல் 62 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 18 முதல் 23 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 71 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 முதல் 38 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 23 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ரூ.120, குடைமிளகாய் ஒரு கிலோ 62 முதல் 78 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 41 முதல் 51 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 31 முதல் 39 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

56
முருங்கைக்காய் விலை என்ன?

பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 46 முதல் 57 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 38 முதல் 48 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 26 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 29 முதல் 36 ரூபாய்க்கும், காலிஃபிளவர் ஒரு கிலோ 48 ரூபாய், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60 முதல் 75 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 48 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

66
புடலங்காய் மாங்காய் விலை

சேனைக்கிழங்கு ஒரு கிலோ 44 முதல் 56 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 42 முதல் 53 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 91 முதல் 114 ரூபாய்க்கும், மாங்காய் ரூ.62 முதல் 78 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 26 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 35 முதல் 44 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ48 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 முதல் 44 ரூபாய்க்கும், கோவைக்காய் ஒரு கிலோ 37 முதல் 47 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories