மேலும் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.57,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் தங்கம் சவரன் ரூ.57,120 என்று இருந்த நிலையில் இரு தினங்களில் ரூ.57,920ஐ தொட்டுள்ளது. இது அடுத்த ஓரிரு தினங்களில் ரூ.58,000ஐ கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தின் தொடர் விலை அதிகரிப்பால் நகை பிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.