Gold price
இந்த உலகத்தில் தங்கத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதுவும் தமிழ்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகள் மீதான மோகம் மிகவும். இந்நிலையில், கடந்த ஜூலை 23-ம் தேதி மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி அதிரடியாக குறைக்கப்பட்டது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
Tamilnadu Gold Rate
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் நிலையில் நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடிக்கிறது.
Today Gold Rate
இன்றைய (அக்டோபர் 27) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. சவரன் ரூ.58,880-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.7,360-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,865-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.62,920-ஆக விற்பனையாகிறது.
Diwali Festivel
தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த பொதுமக்களுக்கு பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது நகை விலை குறைய வாய்ப்பில்லை என்றும் இனி தலைப்பே தங்கம் விலை ரூ.8,000 என்று வைத்துவிடுவார்கள். ரூ.8,500 வரை 24 கேரட் தங்கம் உயரும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.