தாறுமாறாக அதிகரித்த தங்கம் விலை.. ஷாக்கில் இல்லத்தரசிகள்.. விலை எவ்வளவு தெரியுமா?

First Published | Oct 12, 2024, 1:11 PM IST

பட்ஜெட் அறிவிப்புக்குப் பின் குறைந்த தங்கத்தின் விலையைப் பயன்படுத்தி மக்கள் நகை வாங்கி கொண்டே இருந்தனர். தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறியும், இறங்கியும் வந்த சூழலில் விஜயதசமியான இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. இது தங்கம் வாங்குவோரிடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

Today Gold Price

பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு தங்கத்தின் விலை சமீபத்தில் வேகமாக குறையத் தொடங்கியது. இதை அப்படியே மறக்காமல் பயன்படுத்திக் கொண்ட மக்கள் பெருமளவில் நகைக்கடைகளில் குவிந்தனர். நுகர்வோர் மட்டுமல்லாமல், நகை வியாபாரிகளும் இந்த சலுகையை பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான நகைகளை மொத்தமாக வாங்கி கையிருப்பில் வைத்துக் கொண்டனர். 

Today Gold Rate

இதனால், நகை வியாபாரிகளின் வருவாய் இந்த ஆண்டில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக முன்னர் ஒரு தகவல் வெளிவந்தது. அதனால் மேலும் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்து மக்கள் தொடர்ச்சியாக தங்கம் வாங்கி வந்தனர். கடந்த மூன்று நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. அதேபோல தங்கத்தின் விலையும் ஏறியது.

Tap to resize

Gold Price

சென்னையில் இன்று, அக்டோபர் 9ஆம் தேதி, ஆபரணத் தங்கத்தின் விலை முக்கியமான மாற்றத்தைச் சந்தித்துள்ளது. அதற்கு முன் விலை குறைந்து இருந்தாலும், இன்று விஜயதசமி நாளான அக்டோபர் 12ஆம் தேதி, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளதால், சவரனின் விலை ரூ.56,960 ஆகவும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,120 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Today Gold Rate in Chennai

மேலும் 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் இன்று மாற்றத்தை சந்தித்துள்ளது. அதன்படி சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, தற்போதைய விலை ரூ.47,080 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, விலை ரூ.5,885 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் விலை உயர்வு இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிடிஎம் மெஷினில் பணம் போடுறதுக்கு இவ்வளவு கட்டணம் இருக்கா.. அய்யய்யோ தெரியாம போச்சே!

Latest Videos

click me!