400, 444 நாள் ஸ்பெஷல் டெபாசிட்! வட்டியை வாரி வழங்கும் ஸ்டேட் வங்கி!

First Published | Oct 12, 2024, 10:09 AM IST

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 400 மற்றும் 444 நாட்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்களை மீண்டும் நீட்டித்துள்ளது. முதியோருக்கான சிறப்புத் திட்டமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

SBI Special Fixed Deposits

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அதன் பிரபலமான சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களான எஸ்பிஐ அம்ரித் கலாஷ் மற்றும் அம்ரித் விருஷ்டி திட்டங்களை மார்ச் 31, 2025 வரை மேலும் நீட்டித்துள்ளது. இதற்கு முந்தைய காலக்கெடு செப்டம்பர் 30, 2024 வரை இருந்தது.

ஸ்டேட் வங்கி அம்ரித் கலாஷ் (400 நாட்கள்) FD திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.1%, மூத்த குடிமக்களுக்கு 7.6% வட்டி விகிதத்தை வழங்குகிறது. SBI இன் மற்றொரு குறிப்பிட்ட 444 நாள் திட்டமான அம்ரித் விருஷ்டி திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25%, மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டி விகிதம் வழங்குகிறது. மார்ச் 31, 2025 வரை இந்தத் திட்டங்களில் சேரலாம்.

SBI Amrit Kalash

எஸ்பிஐ அம்ரித் கலாஷ்: எஸ்பிஐ அம்ரித் கலாஷ் திட்டத்தை பிப்ரவரி 2023இல் அறிமுகப்படுத்தியது. இந்த சிறப்பு FD திட்டத்திற்கான காலக்கெடுவை பலமுறை நீட்டித்துள்ளது. முந்தைய காலக்கெடு செப்டம்பர் 30, 2024 வரை இருந்தது.

இந்த '400 நாட்கள்' திட்டத்தில் 7.10% வட்டி விகிதம் கிடைக்கும். மூத்த குடிமக்கள் 7.60% வட்டி விகிதம் பெறலாம். இதில் முதலீடு செய்ய மார்ச் 31, 2025 வரை அவகாசம் உள்ளது.

Latest Videos


SBI Amrit Vrishti

எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி: எஸ்பிஐ 'அம்ரித் விருஷ்டி' சிறப்பு டெபாசிட் திட்டத்தை ஜூலை 2024 இல் அறிமுகப்படுத்தியது. 444 நாட்களுக்கான இந்தத் திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25%, மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

ரூ. 2 கோடிக்கு மேல், மொத்த டெபாசிட்டுக்கு 1111 மற்றும் 1777 நாட்களில் 6.15% வங்கி வழங்குகிறது. 2222 நாட்களுக்கு 5.90% வட்டி கிடைக்கிறது. மார்ச் 31, 2025 க்குள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

SBI Green Rupee Term Deposit (SGRTD) for senior citizens

மூத்த குடிமக்களுக்கான SGRTD திட்டம்: எஸ்.பி.ஐ. SGRTD திட்டத்தின் கீழ், வங்கி 1111 மற்றும் 1777 நாட்கள் சில்லறை டெபாசிட்களுக்கு 7.15% வட்டி விகிதம் வழங்குகிறது. இதேபோல, 2222 நாட்கள் சில்லறை டெபாசிட்டுக்கு 7.40% வட்டி விகிதம் வழங்குகிறது. ரூ. 2 கோடிக்கு மேல் மொத்த டெபாசிட் செய்யும்போது,1111 மற்றும் 1777 நாள் டெபாசிட்டிற்கு 6.65% வட்டி வழங்கப்படுகிறது. 2222 நாள் முதலீட்டில் 6.40% வட்டி வழங்கப்படுகிறது.

click me!