Published : Oct 12, 2024, 09:10 AM ISTUpdated : Oct 12, 2024, 09:19 AM IST
இப்போது அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை முன்னிட்டு மக்கள் அதிகமாக ஷாப்பிங் செய்கிறார்கள். ஆனால் செலவு கைமீறிப் போய்விடுமோ என்ற பதற்றம் பலருக்கும் இருக்கிறது. தேவைகளில் சமரசம் செய்துகொள்ளாமல், பட்ஜெட்டுக்குள் பொருட்களை வாங்கி, மகிழ்ச்சியாக பண்டிகையைக் கொண்டாட வல்லுநர்கள் கொடுக்கும் சில யோசனைகளை இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
பண்டிகைக் காலத்தில் உங்கள் பட்ஜெட்டிற்குள் செலவுகளைக் கட்டுப்படுத்த, ஸ்மார்ட் ஷாப்பிங் செய்வது அவசியம். தீபாவளி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு பொருட்களை வாங்குவதற்கு தெளிவான பட்ஜெட்டை நிர்ணயித்து ஷாப்பிங்கைத் தொடங்க வேண்டும் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
28
Diwali Shopping
வாங்குவதற்கு முன் திட்டமிட வேண்டும். உங்களுக்குத் தேவையானவற்றின் பட்டியலை உருவாக்கி, அதை ஒட்டிக்கொண்டு முதலில் எதை வாங்கலாம், எதைத் தவிர்க்கலாம் என்று முடிவு செய்யுங்கள். கையிருப்பும் மற்றும் செலவுகள் குறித்த புரிதலுடன் ஷாப்பிங் செய்தால் பணம் விரயம் ஆவதைத் தடுக்க முடியும்.
38
Shopping Plan
விலை முதலிய விவரங்களை பல்வேறு இடங்களில் ஒப்பிட்டுப் பார்க்கவும். இதற்கு தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தலாம். பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் உள்ள சலுகைகள் மற்றும் விலைகளை ஒப்பிட்டுப் பார்த்து சிறந்த டீலைத் தேர்வு செய்யலாம்.
48
Shopping budget
கடைசி நிமிடத்தில் அவசரமாக பொருட்களை வாங்குவது அதிக செலவுக்கு வழிவகுக்கும். இதைத் தவிர்க்க பண்டிகைக்கு சில மாதங்கள் முன்பாகவே ஷாப்பிங் செய்வது நல்லது. பண்டிகைச் செலவுகளை ஓரிரு மாதங்களுக்குப் பிரித்துக்கொண்டு வாங்கும்போது நிதானமாக வேண்டிய பொருட்களை பார்த்து வாங்கலாம்.
58
Shopping Limits
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி எல்லா நிறுவனங்களிலும் கடைகளிலும் கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கிறார்கள். குறைவான விலை மட்டுமின்றி, கேஷ்பேக், கூப்பன்கள், ரிவார்டு பாயிண்ட், பரிசுப் பொருட்கள் என சலுகைகள் கிடைக்கின்றன. இவற்றில் சிறந்த சலுகையை பயன்படுத்தி வாங்கும்போது அதிக செலவு செய்வதைத் தவிர்க்கலாம். போனஸாக சில பரிசுப் பொருட்களும் கிடைக்கும்.
68
Smart Shopping
பல தளங்களில் விலைகளை ஒப்பிட்டு பண்டிகை விற்பனை மற்றும் தள்ளுபடி காலங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் சேமிப்பை அதிகரிக்க கேஷ்பேக் ஆஃபர்கள், தள்ளுபடி குறியீடுகள் மற்றும் தொகுக்கப்பட்ட டீல்கள் ஆகியவற்றைப் பாருங்கள்,” என்று விற்பனை உத்தி மற்றும் வணிக மாற்ற நிபுணரான கமல் குமார் பரிந்துரைக்கிறார்.
78
Shopping priorities
முக்கியமானவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து, குறைவான முக்கியத்துவம் உள்ள பொருட்களைக் குறைத்துக்கொள்ளுங்கள். முடிந்தால் வீட்டிலேயே செய்யக்கூடியதை கடையில் வாங்குவதைத் தவிர்க்கலாம்.
88
Festive Season Shopping
குடும்பத்தில் உள்ள அனைவரின் தேவைகளையும் அனுசரித்து பொருட்களை வாங்குங்கள். அதற்கு ஏற்ப தனிப்பட்ட செலவுகளை குறைவாக வைத்துக்கொள்ளுங்கள். அதே வேளையில், உயர்தர பரிசுப் பொருட்களை வழங்குவதற்காக ஒரே பொருளில் அதிகம் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.