தங்கம் விலை இன்னும் ஒரு சில மாதங்களில் ஒரு கிராம் 6 ஆயிரம் வரும் என்றும் ஒரு சில ஆண்டுகளில் ஒரு கிராம் பத்தாயிரம் வரும் என்றும் தங்க நகைக்கடைக்காரர்கள் கணித்திருந்தனர். ஆனால் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.
24
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும்.
34
நேற்றைய (ஜூன் 24) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.43,640-ஆக விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,455ஆக விற்பனையானது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 5,9116க்கும், 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 47,328க்கும் விற்பனையானது.
44
வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.74.50க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 74,500க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய (ஜூன் 25) நிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலையை பொறுத்தவரை நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.