Today Gold Rate in Chennai : ஜாக்பாட்! தொடர்ந்து சரசரவென குறையும் தங்கம் விலை! நகை வாங்க இதுதான் சரியான நேரம்

Published : Jun 23, 2023, 10:12 AM ISTUpdated : Jun 23, 2023, 10:14 AM IST

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

PREV
14
 Today Gold Rate in Chennai : ஜாக்பாட்! தொடர்ந்து சரசரவென குறையும் தங்கம் விலை! நகை வாங்க இதுதான் சரியான நேரம்

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. 

24

நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.43,880க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,485க்கு விற்பனையானது.

Gold Rate in Tamilnadu

34

இன்றைய (ஜூன் 23) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.43,560-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,445ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 5,910ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 47,280ஆக விற்பனையாகிறது.

44

வெள்ளி விலை ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.74.00க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 74,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

click me!

Recommended Stories