குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எவ்வளவு விலை அதிகரித்தாலும் மக்களிடையே தங்கம் வாங்கும் ஆர்வம் மட்டும் குறையவில்லை. கடந்த ஆண்டை காட்டிலும் கிராமுக்கு ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்து வருகிறது தங்கத்தின் விலை.
நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.44,360க்கு விற்பனையானது. தங்கம் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,545க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.78.80க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.