எவ்வளவு விலை அதிகரித்தாலும், பொதுமக்களிடையே தங்கம் வாங்கும் ஆர்வம் மட்டும் குறையவில்லை. மக்களின் விருப்பமான தங்கத்தின் விலை குறையவே குறையாதா ? மீண்டும் குறைந்த விலையில் தங்கத்தை வாங்கி வைக்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா ? என்ற பெருத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
24
நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து ரூ.44,336க்கும், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.37 உயர்ந்து ரூ.5,542க்கும் விற்பனையானது.
34
இன்றைய (17 ஜூன்) நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.44,360க்கு விற்பனையாகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,545க்கு விற்பனை செய்யப்படுகிறது.
44
வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.78.80க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.