Today Gold Rate in Chennai : தாறுமாறாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை குறைந்தது - எவ்வளவு தெரியுமா?

First Published | Jul 24, 2023, 10:44 AM IST

கடந்த சில நாட்களாக விலை உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை பார்க்கலாம்.

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Tap to resize

மத்திய தங்க பத்திர மூதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை.  நேற்றைய நிலவரப்பபடி, சவரன் ரூ.44,440-க்கும்,  22 கேரட் தங்கம் கிராம் ரூ.5,555-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,022-க்கும்,  24 கேரட் தங்கம் சவரன் ரூ. 48,176-க்கும் விற்பனையானது. இன்றைய  (ஜூலை 24) நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 10 குறைந்து 5545 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்து ரூ.44360 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராம் 80.50 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 80,500 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Jio Plan : ரூ.399 ரீசார்ஜ் போதும்.. குடும்பத்துக்கே அன்லிமிடெட் ஆஃபர் - முழு விபரம் இதோ !!

Latest Videos

click me!