Published : Apr 18, 2025, 10:25 AM ISTUpdated : Apr 18, 2025, 11:33 AM IST
Gold Price Today: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் சவரனுக்கு ரூ.1800 உயர்ந்து இன்று ரூ.71,560க்கு விற்பனையாகிறது.
Gold Price Today: தங்கம் விலை நாளுக்கு நாளுக்கு நாள் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் நகைக்டைகளில் கொஞ்சம் கூட கூட்டம் குறையவில்லை.
26
Gold Rate
ஜெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை
இந்நிலையில் கடந்த 12ம் தேதி ஒரு சவரன் ரூ.70,160க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த விலை என்பது இதுவரை இல்லாத வரலாற்று உச்சமாக பார்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கடந்த 14ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.70,040க்கும், 15ம் தேதி தங்கம் விலை ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.69,760க்கும் விற்பனையானது. இந்த விலை மீண்டும் குறையும் எதிர்பார்த்து காத்திருந்த நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.
நேற்று முன்தினம் தங்கம் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.70,520-க்கு விற்பனையானது. அதேபோல் நேற்றும் சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.71,360-க்கும், தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.8,920-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது நாளாக தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் சவரன் ரூ.1800 உயர்ந்துள்ளது.
46
Today Gold rate
இன்றைய தங்கம் விலை
இன்று (ஏப்ரல் 18) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.8,945-க்கு விற்பனையாகிறது. இதேபோல் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.71,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை மீண்டும் பதிவு செய்தது. இந்த கிடு, கிடு விலை உயர்வு நகை வாங்குவோரை கலக்கமடைய செய்துள்ளது.
24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 9,758-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.78,064ஆக விற்பனையாகிறது.
66
Silver Rate
வெள்ளி விலை
வெள்ளி விலையில் நான்காவது நாளாக எந்த வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. அதாவது கிராம் வெள்ளி ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.110,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.