
தங்கக் கடனைப் பெறுவது என்பது மிகவும் வசதியான விருப்பம் ஆகும். ஆவணத் தேவைகள் மிகக் குறைவு மற்றும் திருப்பிச் செலுத்தும் விருப்பங்கள் நெகிழ்வானவை. மேலும் தனிநபர் கடன்கள் போன்ற பாதுகாப்பற்ற கடன்கள் தொடர்பான வட்டி விகிதங்களை விட , தங்கக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மிகவும் குறைவாக உள்ளது. பொதுவாக, தங்கக் கடனுக்கு முன்பணம் செலுத்துவதில்லை. இருப்பினும், ஒரு சில வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீதமுள்ள தொகையில் 1 சதவீதம் வரை முன்கூட்டியே செலுத்தும் கட்டணமாக வசூலிக்கலாம்.
தனிப்பட்ட மற்றும் வணிகத் தேவைகளுக்கு கடன் பெற தங்கக் கடன் ஒரு சாத்தியமான விருப்பமாக உருவெடுத்துள்ளது. வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCகள்) மற்றும் தங்கக் கடன் வழங்கும் வங்கி சாரா நிறுவனங்கள் தற்போது தங்கக் கடன் திட்டங்களுக்கு பலவற்றை வழங்குகின்றன. தங்கக் கடன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கடன் தொகையை அதிகரிக்கவும், சொத்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். தங்கக் கடன் வாங்குவதற்கு முன்பு மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
NBFC அல்லது வங்கியிடமிருந்து கடன் வாங்குதல்:
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிறுவனங்கள் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் எளிதான தங்கக் கடன்களை வழங்குகிறார்கள். இருப்பினும், தங்கக் கடனைப் பெற வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனம் (NBFC) பாதுகாப்பான விருப்பமாகக் கருதப்படுவதால், அவற்றைத் தேர்ந்தெடுப்பது பெரும்பாலும் அறிவுறுத்தப்படுகிறது. தங்கக் கடன் என்பது பாதுகாப்பான கடன் என்பதை புரிந்துகொள்வது அவசியம்.
அதாவது, உங்கள் நகைகள் அல்லது தங்கத்தை வங்கிகளில் கொடுத்து கடன் பெறலாம். வங்கிகள் அல்லது நிதி நிறுவனத்தின் தனிப்பட்ட வட்டி விகிதம், தகுதி மற்றும் சலுகைத் தொகை ஆகியவற்றைப் பார்க்கவும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வங்கிகளின் வட்டி விகிதத்தை விட வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் வட்டி விகிதம் குறைவு. மேலும் அவை குறைந்த செயலாக்கக் கட்டணங்களைக் கொண்டுள்ளன.
பிக்சட் டெபாசிட்டில் இந்த லிமிட்டுக்கு மேல் பணத்தை போடாதீங்க? ரிசர்வ் வங்கி அதிரடி!
தங்கத்தின் மதிப்பீடு:
தங்கக் கடன் தொகை உங்கள் நகையின் மதிப்பீட்டைப் பொறுத்தது. நீங்கள் தங்க நகைகளை வைத்து கடன் வாங்கினால், வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் உண்மையான தங்கத்தின் விலையை மட்டுமே கருத்தில் கொண்டு கடன் வழங்கும்.
தங்க நகைகளில் உள்ள கூடுதல் கற்கள் மற்றும் நகைகளின் வடிவமைப்பை கருத்தில் கொள்ள மாட்டார்கள். மேலும், தூய்மையான தரமான தங்கம் அதற்கு மதிப்பு அதிகம். இதன் மூலம் அதிக தங்கக் கடன்களும் கிடைக்கும். பொதுவாக, வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் 18 காரட் அல்லது 24 காரட் தங்கத்தை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்கள்.
மேலும், கடன் வழங்குபவர் வழங்கும் கடன்-மதிப்பு (LTV) விகிதத்தை நீங்கள் சரிபார்க்க வேண்டும். இது 60 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை இருக்கலாம். எந்த வங்கி அல்லது நிறுவனமும் உங்களுக்கு 100% கடனை மதிப்புக்கு வழங்குவதில்லை. உதாரணமாக, எல்டிவி 75 சதவீதம் மற்றும் டெபாசிட் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1,00,000 எனில், கடன் தொகை ரூ.75,000 ஆக இருக்கும்.
வட்டி விகிதம்:
நீங்கள் உண்மையில் தங்கக் கடனைப் பெறுவதற்கு முன், பல்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தை ஒப்பிட்டுப் பார்க்க பரிந்துரைக்கப்படுகிறது. தங்கக் கடனுக்கான வட்டி விகிதம் வெவ்வேறு வங்கிகளால் வித்தியாசமாக வசூலிக்கப்படுகிறது. மற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் ஒப்பிட்டு பார்த்து கடன் வாங்க வேண்டும்.
நகை திருடு போயிடுச்சா.. நஷ்ட ஈடு தரும் நகைக்கடைகள்.. எப்படி தெரியுமா?
திருப்பிச் செலுத்தும் விருப்பங்கள்:
தங்கக் கடனை வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் திருப்பிச் செலுத்தும் விருப்பமாகும். வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் சமமான மாதாந்திர தவணைகள் (EMI) உட்பட கணிசமான அளவிலான திருப்பிச் செலுத்தும் விருப்பங்களை வழங்குகின்றனர். அல்லது கடன் காலத்தின் போது வட்டி செலுத்துவதை மட்டும் தேர்வு செய்து அசல் தொகையை ஒரே நேரத்தில் செலுத்தலாம்.
திருப்பிச் செலுத்தும் அட்டவணை:
தங்கக் கடன்கள் பொதுவாக ஒரு வாரம் முதல் ஓரிரு ஆண்டுகள் வரையிலான குறுகிய காலத் திருப்பிச் செலுத்தும் அட்டவணையைக் கொண்டிருக்கும். தங்கக் கடனைப் பெறும்போது, நீங்கள் மிகவும் வசதியாக இருக்கும் திருப்பிச் செலுத்தும் விருப்பத்தைத் தேர்வுசெய்யவும். எத்தனை ஆண்டுகளில் கடனை செலுத்தப் போகிறீர்கள் என்பதை தேர்ந்தெடுக்கும்போது உங்கள் பொதுச் செலவுகள் மற்றும் பிற பணப்புழக்கங்களைக் கவனியுங்கள்.
தங்கக் கடனை வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான காரணிகளில் ஒன்று, நீங்கள் சரியான நேரத்தில் நிலுவைத் தொகையைச் செலுத்த முடியாவிட்டால் என்ன ஆகும் என்பதை யோசிக்க வேண்டும்.. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் உங்கள் தங்கத்தை ஏலம் விடலாம். கூடுதலாக,
நீங்கள் தற்காலிக பண நெருக்கடி அல்லது உடனடி தனிப்பட்ட அல்லது வணிக நிதித் தேவைகளை அனுபவிக்கும் போது தங்கக் கடன் வாங்குவது சிறந்த முடிவாக இருக்கும். சொத்து வாங்குவது போன்ற அதிக மதிப்புள்ள செலவுகளுக்கு தங்கக் கடன் வாங்குவது கூடுதல் சிரமத்தையே ஏற்படுத்தும்.