தொல்லையில்லாம வருமானம் வந்துகொண்டே இருக்கும்! இந்த 5 பங்குளை நோட் பண்ணிக்கோங்க!

First Published | Sep 4, 2024, 8:14 PM IST

நிலையான வளர்ச்சிக்குப் பிறகு, பங்குச் சந்தை சரிவை சந்தித்து வருகிறது. இருப்பினும், வலுவான அடிப்படைகளைக் கொண்ட சில பங்குகள் நீண்ட கால வருமானத்தைத் தொடர்ந்து வழங்குகின்றன. அத்தகைய ஐந்து பங்குகளை புரோக்கரேஜ் நிறுவனமான ஷேர் கான் பரிந்துரைத்துள்ளது.
 

டாடா மோட்டார்ஸ் பங்குகள்

டாடா மோட்டார்ஸ் பங்குகளை வாங்க ஷேர் கான் நிறுவனம் பரிந்துரைக்கிறது. ஒரு வருட காலத்திற்கு ஒரு பங்குக்கு ₹1,235 இலக்கு விலையை நிர்ணயித்துள்ளது. செப்டம்பர் 4, 2024 அன்று காலை 10:00 மணி நிலவரப்படி, டாடா மோட்டார்ஸ் ஒரு பங்கு விலை 1,079.40 ரூபாயாக குறைந்து வர்த்தகமாகி வருகிறது, இது தற்போதைய விலையிலிருந்து சுமார் 15% வருமானத்தைப் பெறும் திறனை கொண்டுள்ளதாக ஷேர் கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டாட்டா மோட்டார்ஸ் பங்குகள் கடந்த ஒரு ஆண்டில் 75.06% வளர்ச்சியை கண்டுள்ளது. செப்டம்பர் 5, 2023ம் ஆண்டில் ஒரு பங்கின் விலை 611 ரூபாயாக இருந்த நிலையில், செப்டம்பர் 4, 2024 (இன்று) ஒரு பங்கின் விலை 75.06 % சதவீதம் உயர்ந்து 1080.45 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 1161 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் பங்கு

ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் பங்குகளும் உறுதியாக விலை உயரும் என ஷேர் கான் உறுதியாக தெரிவிக்கிறது. ஒரு பங்குக்கு 848 ரூபாய் இலக்கு விலையை நிர்ணயித்துள்ளது. செப்டம்பர் 4, 2024 அன்று காலை 10:00 மணி நிலவரப்படி, பங்கு விலை 616.40 ரூபாயாக குறைந்துள்ளது, இது இந்த கட்டத்தில் இருந்து தோராயமாக 36% வருமானத்தைப் பெறும் திறனைக் கொண்டுள்ளதாக ஷேர் கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் கடந்த ஒரு ஆண்டில் 24.21% உயர்வை கண்டுள்ளன. செப்டம்பர் 5, 2023ம் ஆண்டில் ஒரு பங்கின் விலை 499.60 ரூபாயாக இருந்த நிலையில், செப்டம்பர் 4, 2024 (இன்று) ஒரு பங்கின் விலை 24.21 % சதவீதம் உயர்ந்து 610 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் அதிகபட்சமாக 754 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Tap to resize

கிரிலாஸ்கர் ஆயில் பங்கு

புராக்கரேஜ் நிறுவனமான ஷேர் கான், கிரிலாஸ்கர் ஆயில் பங்குகளை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது. ஒரு வருடத்திற்கு மேல் பங்குக்கு ₹1,593 இலக்கு விலையை நிர்ணயித்துள்ளது. செப்டம்பர் 4, 2024 அன்று காலை 10:00 மணி நிலவரப்படி, பங்கு கிட்டத்தட்ட 3% உயர்ந்து ₹1,399.45 ஆக வர்த்தகமாகி வருகிறது, இது தற்போதைய விலையிலிருந்து சுமார் 18% வருமானத்தைப் பெறும் திறனைக் கொண்டுள்ளதாக ஷேர் கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிரிலாஸ்கர் ஆயில் பங்கு கடந்த ஒரு ஆண்டில் 175.28% உயர்வை கண்டுள்ளன. செப்டம்பர் 4, 2023ம் ஆண்டில் ஒரு பங்கின் விலை 515.05 ரூபாயாக இருந்த நிலையில், செப்டம்பர் 4, 2024 (இன்று) ஒரு பங்கின் விலை 175.78% சதவீதம் உயர்ந்து 1362.45 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் அதிகபட்சமாக 1418.95 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

PCBL பங்கு

PCBL பங்குகளை வாங்க ஷேர் கான் பரிந்துரைக்கிறது. 627 ரூபாய்க்கு இலக்கு விலையை நிர்ணயித்துள்ளது. செப்டம்பர் 4, 2024 அன்று காலை 10:00 மணி நிலவரப்படி, பங்கு விலை 512.30 ரூபாயாக ஆக உயர்ந்து வர்த்தகமாகியது. இது இந்த நிலையிலிருந்து சுமார் 25% வருமானத்தைப் பெறும் திறனைக்
கொண்டுள்ளதாக ஷேர் கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

PCBL பங்குகள் கடந்த ஒரு ஆண்டில் 195.07% உயர்வை எட்டியுள்ளது. செப்டம்பர் 4, 2023ம் ஆண்டில் ஒரு பங்கின் விலை 173.30 ரூபாயாக இருந்த நிலையில், செப்டம்பர் 4, 2024 (இன்று) ஒரு பங்கின் விலை 195.07% சதவீதம் உயர்ந்து 510.20 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் அதிகபட்சமாக 1418.95 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாய்-டெக் பைப்ஸ் பங்கு

ஹாய்-டெக் பைப்ஸ் பங்குகளுக்கு ஒரு வருடத்திற்கு மேல் 240 ரூபாய் இலக்கு விலையை ஷேர் கான் நிர்ணயித்துள்ளது. செப்டம்பர் 4, 2024 அன்று காலை 10:00 மணி நிலவரப்படி, பங்கு ₹186.05 ஆக குறைந்து வர்த்தகமாகியது. இது இந்த பங்கிலிருந்து சுமார் 29% வருமானத்தைப் பெறும் திறனைக் கொண்டுள்ளதாக ஷேர் கான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Hi-Tech Pipes பங்குகள் கடந்த ஒரு ஆண்டில் 139.82% உச்சத்தை எட்டியுள்ளது. செப்டம்பர் 4, 2023ம் ஆண்டில் ஒரு பங்கின் விலை 173.30 ரூபாயாக இருந்த நிலையில், செப்டம்பர் 4, 2024 (இன்று) ஒரு பங்கின் விலை 139.82% சதவீதம் உயர்ந்து 77.25 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் அதிகபட்சமாக 186.60 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது நிதி இழப்பு அபாயங்களைக் கொண்டது. முதலீடு செய்வதற்கு முன் எப்போதும் உங்கள் சந்தை நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.

Latest Videos

click me!