அண்மையில், சீனாவில் முதலீட்டாளர்களுக்கு ஊக்க சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதன் எதிரொலியாக கடந்த சில நாட்களாக சீனப் பங்குச்சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. ஆனால், ஊக்க சலுகைகளால் பெரிய நன்மை கிடைக்காது எனக் கருதும் முதலீட்டாளர்கள் பலர் பங்குகளை விற்கத் தொடங்கியுள்ளனர். அவர்களும் மாற்று முதலீடாக தங்கத்தைத் தேர்வு செய்கின்றனர். இதுவும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்தி இருப்பதாகக் கருதப்படுகிறது.