தினமும் ஒருமணிநேரம்! பங்கு வர்த்தகத்தில் மாதம் ஒன்றரை லட்சம் சம்பாதிக்கும் இல்லத்தரசி!

First Published | Oct 16, 2024, 8:49 AM IST

சமீப காலமாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வீட்டிலிருந்தே பங்குச்சந்தையில் முதலீடு செய்து மாதம் தோறும் ரூ.1.5 லட்சம் சம்பாதிக்கும் இல்லத்தரசி ஒருவரைப் பற்றி இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

Trader Mukta Dhamankar

முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் பங்குச் சந்தையில் வேகமாகப் பணம் சம்பாதித்து வருகின்றனர். இந்தப் போட்டியில் பெண்களும் முன்னேறி வருகின்றனர். சமீப காலமாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இப்போது பல இல்லத்தரசிகளும் வர்த்தகத்தில் நல்ல பணம் சம்பாதிக்கிறார்கள்.

காலை முதல் மாலை வரை சமையல் உள்ளிட்ட வேலைகளைச் செய்யும் இல்லத்தரசிகள் வர்த்தகத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள். மாதந்தோறும் சுமார் 1.5 லட்சம் சம்பாதிக்கும் அத்தகைய இல்லத்தரசி ஒருவரின் கதையைத் தெரிந்துகொள்ளலாம்.

Mukta Dhamankar Net Worth

யுனிசெப்பில் ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளராகவும் பணியாற்றிய முக்தா தமங்கரின் கதை இது. மும்பையில் வசிக்கும் இவர் இப்போது இல்லத்தரசியாக இருக்கிறார். அவரது கணவர் கடற்படை அதிகாரியாக உள்ளார். முக்தா திருமணத்திற்குப் பிறகும் வேலைக்குச் சென்றுவந்தார். ஆனால் தாயான பிறகு, அவர் தனது பெரும்பாலான நேரத்தை வீட்டிலேயே செலவிடத் தொடங்கினார். ஒரு நாள் வேடிக்கையாக பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்தார். அது அவரை வெற்றிகரமான முதலீட்டாளராக மாற்றியுள்ளது.

முக்தா தமன்கர் வீட்டில் கிடைக்கும் நேரத்தை பங்கு வர்த்தகத்தில் செலவிடத் தொடங்கியதாகச் சொல்கிறார். குழந்தைகளைப் பராமரிப்பதுடன், ஷேர் மார்க்கெட்டிலும் முதலீடு செய்து வந்தார். சில நாட்களுக்குப் பிறகு பங்குகளை விற்று ரூ.2,000 லாபம் ஈட்டினார். அது அவருக்கு உற்சாகம் அளித்தது. தொடர்ந்து பங்கு வர்த்தகத்தில் ஈடுபட செய்ய முடிவு செய்தார். இப்போது அவர் ஒவ்வொரு மாதமும் 1.5 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டுகிறார்.

Tap to resize

Who is Mukta Dhamankar?

வர்த்தகம் தனக்கு அவ்வளவு சுலபமாக இல்லை என்று முக்தா கூறுகிறார். காலையில், குழந்தைகளுக்கு உணவு சமைத்து பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பங்கு வர்த்தகத்தில் நேரத்தைச் செலவிடுகிறார். அவரது தந்தை சில சமயங்களில் ப்ளூ சிப்ஸில் முதலீடு செய்ததால், அவரிடமிருந்து சில ஆலோசனைகளைப் பெற்றுள்ளார். படிப்படியாக, வீட்டு வேலைகளுக்கு இடையில் நேரத்தை ஒதுக்கி, வர்த்தகத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.

​​முக்தா தமங்கர் தினமும் தூங்கச் செல்வதற்கு முன் பங்குகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வார். உலகளாவிய மற்றும் இந்திய பொருளாதார விவகாரங்களுடன், கார்ப்பரேட் செய்திகளையும் அறிந்துகொள்கிறார். இதற்கெல்லாம் சுமார் 1 மணிநேரம் செலவிடுகிறார். பிறகு காலையில் எழுந்து அன்றாட வேலைகள் முடிந்ததும் சந்தையில் முதலீடு செய்கிறார்.

Women Trader Mukta Dhamankar

பங்குச்சந்தையில் இருந்து தொடர்ச்சியான வருமானம் ஈட்டுவது எளிதல்ல என்றும் முக்தா கூறுகிறார். ஆரம்பத்தில் சில சமயம் நஷ்டமும் வந்துள்ளது. பின்னர் சந்தையில் லாபம் ஈட்டுவதற்கான வழிகளைக் கற்றுக்கொண்டு, வெவ்வேறு பங்குகளில் சிறிய தொகையை முதலீடு செய்யத் தொடங்கினார். சில சமயம் 2,000-3,000 ரூபாய் லாபம் வரும். சில நேரத்தில் 5,000 ரூபாய் லாபம் வரும்.

ஈக்விட்டி பண்டுகள் தவிர, மியூச்சுவல் ஃபண்டுகள், அரசுப் பத்திரங்கள், சொத்து, தங்கம் போன்றவற்றிலும் முக்தா தமன்கர் முதலீடு செய்கிறார். சந்தையில் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகவும் மந்தமாகவும் செயல்படும் பங்குகள் இருக்கும். முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியதெல்லாம் சரியான நேரத்தில் சரியான பங்கில் முதலீடு செய்வதுதான் என்று முக்தா தமன்கர் கூறுகிறார்.

Latest Videos

click me!