Post Office Schemes: வரி இல்லாமல் லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்.. முழு லிஸ்ட் இதோ!

Published : Aug 27, 2026, 10:18 AM IST

Tax-Free Post Office Schemes: வரி இல்லாமல் லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் குறித்தும் உங்களுக்கு எந்த திட்டம் சிறந்ததாக இருக்கும்? என்பது குறித்தும் இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
பெஸ்ட் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள்

போஸ்ட் ஆபிஸ் சேமிப்புத் திட்டங்கள் என்றாலே பாதுகாப்பானது என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. காரணம், மத்திய அரசின் நேரடி உத்தரவாதம். ஆனால், வரிச் சலுகைகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொருவிதம். முதலீடு, வட்டி, முதிர்வுத் தொகை என மூன்று நிலைகளிலும் வரி விலக்கு (EEE) அளிக்கும் திட்டங்கள் எவை, பகுதி சலுகை தரும் திட்டங்கள் எவை என்பதைத் தெரிந்துகொண்டால், உங்கள் பணமும் சேமிப்பாகும், வரியும் மிச்சமாகும்.

வரிச் சேமிப்புதான் உங்கள் முக்கிய நோக்கம் என்றால், அஞ்சலகத்தில் இந்த இரண்டு திட்டங்கள்தான் சிறந்த தேர்வுகள். முதலீடு, வட்டி, முதிர்வுத் தொகை என மூன்று கட்டங்களிலும் முழுமையான வரி விலக்கு அளிப்பதால், இவை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

24
சுகன்யா சம்ரித்தி யோஜனா

பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) திட்டம், சிறு சேமிப்புத் திட்டங்களிலேயே மிக அதிகபட்சமாக 8.2% வட்டியை வழங்குகிறது. இதில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை செய்யும் முதலீட்டிற்கு பழைய வரி விதிப்பு முறையின் கீழ், பிரிவு 80C-ன் படி வரி விலக்கு உண்டு. 21 வருட முதிர்வுக்குப் பின் கிடைக்கும் தொகைக்கும் வரி கிடையாது என்பது இதன் சிறப்பம்சம்.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) நீண்ட கால சேமிப்புக்கு ஒரு சிறந்த தேர்வாகும். 15 வருட கால அவகாசம் கொண்ட இத்திட்டம், தற்போது 7.1% வட்டி வழங்குகிறது. இதிலும் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டிற்கு 80C பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம். சுகன்யா திட்டத்தைப் போலவே, இதிலும் முதலீடு முதல் முதிர்வு வரை வரி செலுத்தத் தேவையில்லை.

34
முதலீட்டுக்கு வரி விலக்கு

சில திட்டங்கள் முதலீட்டுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கின்றன, ஆனால் வட்டி வருமானத்திற்கு வரி விதிக்கப்படலாம். தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) 7.7% வட்டி விகிதத்துடன் 5 வருட லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளது. இதில் செய்யும் முதலீட்டுக்கு 80C வரி விலக்கு உண்டு. இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், முதல் நான்கு ஆண்டுகளுக்குக் கிடைக்கும் வட்டியை மறுமுதலீடாகக் கருதி, அதற்கும் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு கோரலாம். ஆனால், ஐந்தாம் ஆண்டு வட்டிக்கு வரி செலுத்த வேண்டும்.

5 ஆண்டு அஞ்சலக டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீட்டுக்கு மட்டும் 80C வரி விலக்கு கிடைக்கும். ஆனால், இதில் கிடைக்கும் வட்டிக்கு உங்கள் வருமான வரி வரம்புக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திலும் (SCSS) இதேபோல முதலீட்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு இருந்தாலும், வட்டி வருமானம் முழுமையாக வரிக்கு உட்பட்டது.

44
வரிச் சலுகை இல்லை: இந்தத் திட்டங்கள் யாருக்கு?

மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) மற்றும் கிசான் விகாஸ் பத்ரா (KVP) ஆகியவை முறையே நிலையான மாத வருமானம் மற்றும் பணத்தை இரட்டிப்பாக்க உதவுகின்றன. ஆனால், இவற்றின் முதலீட்டுக்கு 80C வரி விலக்கு கிடையாது. மேலும், இவற்றின் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கும் வரி செலுத்த வேண்டும். எனவே, வரி சேமிப்பு உங்கள் நோக்கமாக இருந்தால், இந்தத் திட்டங்கள் சிறந்த தேர்வுகள் அல்ல என்பது தெளிவாகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories