Financial Rules: செப்டம்பர் 1 முதல் மாறும் விதிகள்: உங்கள் பணப் பரிவர்த்தனைகளில் என்னென்ன மாற்றங்கள்?

Published : Aug 27, 2026, 08:21 AM IST

செப்டம்பர் 1 முதல் வங்கி, எல்பிஜி கேஸ், மற்றும் சர்வதேச பயணம் தொடர்பான பல புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் சாமானிய மக்களின் அன்றாட செலவுகள் மற்றும் சேமிப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

PREV
15
சில மாற்றங்கள் மக்களுக்கு நிம்மதி தரும்
செப்டம்பர் 1 முதல், சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை, சேமிப்பு, செலவுகளை நேரடியாகப் பாதிக்கும் பல முக்கிய மாற்றங்கள் வரப்போகின்றன. வங்கி, எல்பிஜி கேஸ் சிலிண்டர், வருமான வரி, சர்வதேச பயணம் என பல விதிகளும் மாறுகின்றன. இதில் சில மாற்றங்கள் மக்களுக்கு நிம்மதி தரும், சில உங்கள் பாக்கெட்டுக்கு பாரமாக இருக்கலாம்.
25
FDயில் என்ன மாற்றம் தெரியுமா?
வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட்கள் தொடர்பாக சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. புதிய வழிகாட்டுதல்களின்படி, ரூ. 3 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட பெரிய டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் தினமும் காலை 10:10 மணிக்குள் தங்கள் இணையதளங்களில் வெளியிட வேண்டும். இது சிறிய ஃபிக்ஸட் டெபாசிட்களைப் பாதிக்காது.
35
இனி இமிக்ரேஷன் கவுன்ட்டர்களில் நிற்க தேவையில்லை
செப்டம்பர் 1 முதல், இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்லும் விமானப் பயணிகள் இனி இமிக்ரேஷன் கவுன்ட்டர்களில் போர்டிங் பாஸ்களில் ஸ்டாம்ப் குத்தத் தேவையில்லை. குடிவரவுப் பணியகம் (Bureau of Immigration) இந்த முடிவை எடுத்துள்ளது. பயணிகள் தங்கள் மொபைல் போனில் எலக்ட்ரானிக் போர்டிங் பாஸைக் காட்டினால் போதும். இதனால் பயணிகளின் நேரம் மிச்சமாகும்.
45
செப்டம்பர் 1 முதல் இ-கேஒய்சி செய்ய முடியாது
சமையல் எரிவாயு பயன்படுத்தும் குடும்பங்களுக்கு இது ஒரு முக்கியத் தகவல். எல்பிஜி இணைப்புக்கான இ-கேஒய்சி-யை முடிக்க ஆகஸ்ட் 31 கடைசித் தேதியாகும். செப்டம்பர் 1 முதல் இ-கேஒய்சி செய்ய முடியாது. ஆதார் பயோமெட்ரிக் அடிப்படையிலான இந்த செயல்முறை கட்டாயமாகும். இதை முடிக்கவில்லை என்றால், மானிய விலையில் சிலிண்டர் கிடைக்காமல் போகலாம்.
55
ஏடிஎம் பயன்பாட்டுக் கட்டணங்கள் மாற வாய்ப்பு
மேலே குறிப்பிட்ட மாற்றங்களுடன், செப்டம்பர் 1 அன்று எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை, விமான எரிபொருள் விலை, வங்கி எஃப்டி வட்டி விகிதங்கள் மற்றும் ஏடிஎம் பயன்பாட்டுக் கட்டணங்கள் மாற வாய்ப்புள்ளது. இவை அனைத்தும் சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டைப் பாதிக்கும் என்பதால், புதிய விதிகளைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories