கடந்த 5 நாட்களில் ரூ.2,680 குறைந்த விலை
இந்நிலையில் கடந்த 5 நாட்களாக எதிர்பாராத விதமாக தங்கம் விலை சரசரவென குறைந்து வந்தது. அதாவது ஏப்ரல் 4-ம் தேதி சவரனுக்கு ரூ.1,280, ஏப்ரல் 5-ம் தேதி ரூ.720, ஏப்ரல் 7-ம் தேதி ரூ.200, ஏப்ரல் 8ம் தேதி ரூ.480 குறைந்தது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,680 வரை சரிந்து நகை வாங்குபவர்கள் சந்தோஷத்தில் இருந்து வந்தனர். மேலும் நகை விலை மேலும் என குறையக்கூடும் கூறப்பட்டு வந்த நிலையில் மீண்டும் தங்கம் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.