2 லட்சத்திற்கு மேல் நகைக்கடன்.! இனி வட்டி கட்டுவது எப்படி.? கூட்டுறவு வங்கிகள் புதிய நடைமுறை

Published : Apr 10, 2025, 09:04 AM ISTUpdated : Apr 10, 2025, 09:22 AM IST

தங்கத்தின் விலை உயர்வால் நகை கடன் அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெறுவது அதிகரித்துள்ளது.

PREV
14
2 லட்சத்திற்கு மேல் நகைக்கடன்.! இனி வட்டி கட்டுவது எப்படி.? கூட்டுறவு வங்கிகள் புதிய நடைமுறை

Cooperative banks jewelry loans : தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், தங்கத்தை புதிதாக வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். அந்த வகையில் மருத்துவ செலவு, கல்வி செலவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு முக்கியமாக கை கொடுப்பது தங்க நகைகள்,  தங்களுடைய நகைகளுக்கு வங்கிகளில் உடனடியாக அடகு வைத்து  அதற்கு ஈடாக வங்கி நிர்ணயிக்கும் பணத்தை மிகக் குறுகிய நேரத்தில் பெற முடியும். மேலும்  அரசு வங்கிகளில்  குறைந்த வட்டி செலுத்தினால் போதும் என்கிற நிலையும் பொதுமக்களை நகைக்கடனை நாடவைக்கின்றன.

24
cooperative bank gold loan

ஏலம் விடப்படும் நகைகள்

அதிலும் ஆண்டின் இறுதியில் நகையை திருப்ப முடியாத நிலையில் வட்டியை மட்டும் செலுத்தி மறுஅடகு வைக்க முடிவது மிகப் பெரிய வசதியாக இருந்தது . இந்த நிலையில் கடந்த  5  ஆண்டுகளில் மட்டும் நகை கடன்கள் 300 % வரை உயர்ந்திருப்பதாக தெரிவிக்கும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதே நேரம் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கும் தங்க நகைகளுக்கு 70 முதல் 80 சதவிகிதம் வரை கடன் கொடுக்கப்படுகிறது. இதற்கு உரிய முறையில் வட்டி மற்றும் நகைகளை திருப்பாத பட்சத்தில் கடன் பெறுவோரின் உரிமைகளுக்கு எதிராக நகைகளை ஏலம் விடப்படுகிறது.

34

ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள்

இதனையடுத்து தான் ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் படி,  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நகை அடகு வைத்து ஓராண்டின் நிறைவில் வட்டியை மட்டும் கட்டி மறு அடகு வைக்கும் நடைமுறைக்கு பதிலாக வட்டி மற்றும் அசல் இரண்டையும்  கட்டி  நகையை திருப்பிய  மறுதினம் தான் மறு அடகு வைக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் தங்கள் நகைகளை திருப்பி வைக்கமுடியாமல் திணறி வருகிறார்கள். இதற்காக வெளிநபர்களிடமும் வட்டிக்கு பணம் வாங்கி தங்க நகைகளுக்கு வட்டி கட்டி திருப்பி வைக்க வேண்டிய நிலை உள்ளது. 

44

2 லட்சத்திற்குள் நகை கடன்- கூட்டுறவு வங்கி

இதன் காரணமாக கூட்டுறவு வங்கிகளில் பெருமளவில் மக்கள் நகை கடன் பெற தொடங்கியுள்ளனர் , அப்படி கூட்டுறவு வங்கிகளில் நகைகளை கடனாக வைப்பவர்களுக்கு 30 லட்சம் வரை நகை கடன் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளும் சில புதிய விதிகளை அறிவித்துள்ளது.

அதன்படி 2 லட்சம் ரூபாய் வரை நகை கடன் பெற்றவர்கள் மட்டுமே ஆண்டு வட்டி முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் நகைக்கடன் பெற்றவர்கள் மாத வட்டி கட்ட வேண்டும் என கூட்டுறவு வங்கிகள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories