ஒரே நாளில் 2ஆவது முறையாக அதிகரித்த தங்கத்தின் விலை? எவ்வளவு தெரியுமா?

Published : Apr 09, 2025, 06:03 PM IST

Today Gold Rate in Chennai : ஏப்ரல் 9ஆம் தேதி இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலையானது 2ஆவது முறையா அதிகரித்து அதிர்ச்சி அளித்துள்ளது. இதன் மூலமாக எவ்வளவு அதிகரித்துள்ளது ஒரு சவரன் எவ்வளவு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
18
ஒரே நாளில் 2ஆவது முறையாக அதிகரித்த தங்கத்தின் விலை? எவ்வளவு தெரியுமா?
Today Gold Rate in Chennai, Today Gold Price in Chennai

Today Gold Rate in Chennai : மக்கள் குறிப்பாக பெண்கள் அதிகம் விரும்பக் கூடியது தங்கம். அவர்களுக்கு தங்கத்தின் மீதான ஆசை நாளுக்கு நாள் அதிகரித்து வரும். அதற்கேற்ப இப்போது தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

28
Today Gold Rate in Chennai, Today Gold Price in Chennai

கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு சவரன் ரூ.69,000 நெருங்கி வருகிறது. கூடிய விரைவில் ரூ.70 ஆயிரத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

38
Today Gold Rate in Chennai, Today Gold Price in Chennai

இந்த நிலையில் பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்தார். அதேபோல பல்வேறு நாடுகள் தங்கத்தின் மீதான முதலீட்டை திரும்ப பெறுவது போன்ற காரணங்களால் தற்போது தங்கத்தின் விலை குறைந்து வந்தது.

48
Gold and Silver Price in Chennai

கடந்த 6 நாட்களில் மட்டும் ரூ.2680 குறைந்தது. இது மேலும், ரூ5000 முதல் ரூ.8000 வரையில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

58
Gold and Silver Rate Today in Chennai

கடந்த 3ஆம் தேதி 22 கேரட் ஒரு சவரன் தங்கம் ரூ.68,480க்கு விற்பனையான நிலையில் நேற்று 8ஆம் தேதி 22 கேரட் ஒரு சவரன் தங்கம் ரூ.65,800க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று காலை நிலவரப்படி 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.8,290க்கு விற்பனை செய்யப்பட்டது.

68
Today Gold Rate in Chennai

இதுவே ஒரு சவரன் ரூ.520 அதிகரித்து ரூ.66,320க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே 18 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.55 அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.6835க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு 18 கேரட் தங்கம் ரூ.54,680க்கு விற்பனையானது.

78
Today Gold Price in Chennai

இந்த நிலையில் தான் இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.65 அதிகரித்த நிலையில் 2ஆவது முறையாக ஒரு கிராம் ரூ.120 அதிகரித்து ஒரு சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.67,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி ஒரு நாளில் தங்கத்தின் விலை ரூ.1480 அதிகரித்துள்ளது.

88
Today Gold Price in Chennai

இதே போன்று வெள்ளி விலையானது கிராமுக்கு ரூ.102க்கு விற்பனை செய்யப்பட்டு ஒரு கிலோ ரூ.1,02,000க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மதிய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியானது ரூ.104க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,04,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories