சர்வதேச அஞ்சல் சங்கம் கடந்த 1874ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றாக அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. இதனை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை தேசிய அஞ்சல் வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
25
Sukanya Samriddhi Account
இந்நிலையில், தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை சார்பில், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அஞ்சல் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக 1,457 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
35
Sukanya Samriddhi Account
மேலும் ஏற்றுமதி மற்றும் சர்வதேச அஞ்சல் சேவைக்காக 66 அஞ்சல் நிலையங்களில் பா்போர்ட் விண்ணப்பத்திற்காக 30 அஞ்சல் அலுவலகங்களிலும் கவுண்டர்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளி மாணவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தும் விதமாக இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியுடன் இணைந்து மாநிலம் முழுவதும் 51.5 லட்சம் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
45
Sukanya Samriddhi Account
பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டங்களில் ஒன்றான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழ்நாடு வட்டம் தொடர்ந்து 8வது வருடமாக முதல் இடத்தை பிடித்துள்ளது.
55
Sukanya Samriddhi Account
செல்வமகள் சேமிப்பு திட்டம்
இந்தத் திட்டத்தில் எட்டு சதவீதத்திற்கும் அதிகமான வட்டி (Sukanya Samriddhi Yojana (SSY)) அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும். இந்த கணக்கை பெண் குழந்தை பிறந்தது முதல் குழந்தைக்கு 10 வயது வரை மட்டுமே தொடங்க முடியும். அதே நேரத்தில், ஒரு பெண் குழந்தையின் பெயரில் ஒரு செல்வமகள் சேமிப்பு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.