ஒவ்வொரு மாசமும் ரூ.1 லட்சம் பென்ஷன் வேணுமா? அப்படின்னா முதல்ல இப்படி முதலீடு செய்யுங்க!!

First Published | Oct 13, 2024, 8:57 AM IST

25 வயதில் இருந்து தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம் 60 வயதில் பணி ஓய்வு பெறும்போது ஒரு லட்சம் ரூபாய் மாத ஓய்வூதியத்தைப் பெறலாம்.

National Pension Scheme (NPS)

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் சேமிப்புத் திட்டமாகும். இதன் முக்கிய நோக்கம் மக்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதாகும். இத்திட்டத்தில் முதலீடு மற்றும் அதில் கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் ஓய்வூதியத் தொகை தீர்மானிக்கப்படுகிறது.

1 lakh pension from NPS

ஓய்வுக்குப் பிறகு, உங்கள் வருமானம் நின்றுவிடும். ஆனால் செலவுகள் அதிகரிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நிலையான வருமான ஆதாரம் தேவைப்படுகிறது. NPS திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்தால், ஓய்வுபெற்ற பிறகு மாதந்தோறும் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெறலாம்.

Tap to resize

NPS investment

25 வயதில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்குவதாக வைத்துக்கொள்வோம். 60 வயது வரை தொடர்ந்து முதலீடு செய்தால், மொத்த முதலீட்டுக் காலம் 35 ஆண்டுகள். இந்த முதலீட்டுக்கு சுமார் 10% வட்டி கிடைக்கும். ரூ.13,100 மாதாந்திர முதலீடு செய்தால், 35 ஆண்டுகளில்) மொத்த முதலீடு ரூ.55.02 லட்சம் ஆகும். இதில் 10% வட்டி வருமானம் கிடைத்தால், முதிர்வுத் தொகை ரூ.5.01 கோடியாக இருக்கும்.

NPS annuity

ரூ.5.01 கோடி முதிர்வுத் தொகையில் 40% (அதாவது ரூ.2 கோடி) பணத்தை ஆன்யூட்டி திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். ஆன்யூட்டியில் வட்டி விகிதம் அதிகமாக இருந்தால், மாதாந்திர ஓய்வூதியமும் அதிகமாகக் கிடைக்கும். உத்தேசமாக 6% வருமானம் கிடைத்தால், ஓய்வுக்குப் பிறகு ரூ.1 லட்சம் பென்ஷன் பெறலாம்.

NPS Tax benefits

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் செய்துள்ள முதலீட்டின் மூலம் பெறும் வருமானத்துக்கு வரிச்சலுகையும் பெறலாம். வருமான வரிச் சட்டத்தின் 80CCD(1B) பிரிவின் கீழ் ரூ.50,000 வரை வரிவிலக்கு வழங்கப்படுகிறது.

Latest Videos

click me!