முதியோர் பென்ஷன் நிறுத்தப்படுவதைத் தவிர்க்க உடனே இதைச் செய்யுங்க!

First Published | Oct 13, 2024, 10:16 AM IST

80 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவோர், அக்டோபர் 1ஆம் தேதி முதல் தங்கள் ஜீவன் பிரமான் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். வழக்கமான அவகாசம் நவம்பர் 1ஆம் தேதி தொடங்கும் நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டுள்ளது.

Jeevan Pramaan Annual Life Certificate

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்கு ஜீவன் பிரமான் சான்றிதழை ஆண்டுதோறும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்க வேண்டும். 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்தச் சான்றிதழைத் தாக்கல் செய்யலாம்.

Annual Life Certificate

ஜீவன் பிரமான் என்பது வருமான வரி சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் அடிப்படையிலான மற்றும் பயோமெட்ரிக் டிஜிட்டல் சான்றிதழாகும். பொதுவாக வருடாந்திர ஜீவன் பிரமான் சான்றிதழை சமர்ப்பிக்க கடைசி தேதி நவம்பர் 30 ஆகும். அரசு தேவைப்பட்டால் இந்த அவகாசத்தை நீட்டிக்கலாம்.

Tap to resize

Jeevan Pramaan App

80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த ஓய்வூதியதாரர்கள், நவம்பர் 1ஆம் தேதிக்குப் பதிலாக அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்தே ஜீவன் பிரமான் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Jeevan Pramaan Face App

டிஜிட்டல் முறையில் ஜீவன் பிரமான் சான்றிதழை எளிமையாக சமர்ப்பிக்கலாம். ஜீவன் பிரமான் சான்றிதழைப் பெறுவதற்கு ஆதார் எண் அவசியம். கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 'AadhaarFaceRD' மற்றும் 'Jevan Pramaan Face App' செயலிகளை டவுன்லோட் செய்து நிறுவிக்கொள்ளவும்.

Jeevan Pramaan Life Certificate

இந்தச் செயலிகள் மூலம் முகத்தை ஸ்கேன் செய்து, ஓய்வூதியதாரர் தொடர்பான விவரங்களையும் நிரப்பவும். போனில் செல்ஃபி கேமராவில் புகைப்படம் எடுத்துச் சமர்ப்பிக்கவும். உடனே, ஜீவன் பிரமான் சான்றிதழை டவுன்லோட் செய்வதற்கான இணைப்புடன் SMS வரும். அதை டவுன்லோட் செய்து ஜீவன் பிரமான் தளத்தில் சமர்ப்பிக்கவும்.

Pensioners

ஜீவன் பிரமான் சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டால் ஓய்வூதியம் நிறுத்தப்படும். இருப்பினும், அடுத்த மாதத்தில் சான்றிதழைச் சமர்ப்பித்தால், ஓய்வூதியம் மீண்டும் கிடைக்கத் தொடங்கும். நிலுவைத் தொகைகளும் வழங்கப்படும். ஆனால் மூன்று ஆண்டுகளுக்குள் சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே தொடர்ந்து பென்ஷன் கிடைக்கும்.

Jeevan Pramaan Rules

மூன்று ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் ஜீவன் பிரமான் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என்றால், உரிய செயல்முறையின்படி CPAO மூலம் தகுதிவாய்ந்த அதிகாரியின் அனுமதிக்குப் பிறகு ஓய்வூதியம் தொடரும்.

Latest Videos

click me!