வெறும் 1000 ரூபாய் சேமித்தால் போதும்! மகள் மேஜராகும் போது ரூ.15 லட்சம் கிடைக்கும்!

Published : Jul 04, 2024, 04:06 PM ISTUpdated : Jul 04, 2024, 04:07 PM IST

Systematic investment plan: உங்கள் பெண் குழந்தையின் எதிர்காலத்திற்காக மாதத்திற்கு ரூ.1,000 முதலீடு செய்தால் குழந்தை மேஜராகும்போது கிட்டத்தட்ட ரூ.15 லட்சம் பணம் மொத்தமாகக் கிடைக்கும். இதற்கு முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) நிச்சயமாக பயன்படும்.

PREV
17
வெறும் 1000 ரூபாய் சேமித்தால் போதும்! மகள் மேஜராகும் போது ரூ.15 லட்சம் கிடைக்கும்!

குழந்தை பிறந்தவுடனே SIP திட்டத்தில் சேர்ந்து தொடர்ச்சியாக மாதாந்திர முதலீடு செய்து வந்தால், மகள் மேஜர் ஆவதற்குள் எளிதாக ஒரு பெரிய தொகையை சேர்த்துவிடலாம். சிப் முதலீடு பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்டிருப்பதால், இதில் சந்தை அபாயங்களும் உண்டு. ஆனால், நீண்ட கால முதலீட்டில் வேறு எந்த திட்டத்திலும் இல்லாத அளவு வருமானம் கிடைக்கும்.

27

சிப் முதலீட்டில் சராசரி வருமானம் 12 சதவீதமாக இருக்கும் என்று முதலீட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர். சில நேரங்களில் கணிப்பை விடக் கூடுதலாகவும் லாபம் கிடைக்கலாம்.

37

குழந்தை பிறந்தவுடனே சிப் திட்டத்தில் ரூ.1000 முதலீடு செய்யத் தொடங்கினால், 18 வயதிற்குள் 14 லட்சத்திற்கும் அதிகமான தொகையைச் சேர்க்கலாம். இத்துடன் ஆண்டுதோறும் 10 சதவிகிதம் டாப்-அப் செய்ய வேண்டும்.

47

சிப் முதலீட்டில் வழக்கமான பணத்துடன் கூடுதலாக செலுத்ததும் தொகை டாப்-அப் எனப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் டாப்-அப் செய்து, முதலீட்டுத் தொகையை 10 சதவிகிதம் அதிகரிக்க வேண்டும்.

57

அதாவது இரண்டாம் ஆண்டில் இஇருந்து ரூ.1000க்குப் பதில் ரூ.1100 சேமிக்க வேண்டும். மூன்றாம் ஆண்டில் மேலும் 10 சதவீதத்தை அதிகரித்து, ரூ.1210 முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் முதலீட்டுத் தொகையை உயர்த்த வேண்டும்.

67

இந்த ஃபார்முலாவில் 18 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால், 18 ஆண்டுகளில் மொத்த முதலீட்டுத் தொகை ரூ.5,47,190 ஆக இருக்கும். வட்டி ரூ.8,94,276 சேர்ந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு, ரூ.14,41,466 கிடைக்கும்.

77

இந்தத் தொகை முதலீடு மகளின் மேற்படிப்புக்கும் மற்ற தேவையான செலவுகளுக்கும் உதவியாக இருக்கும். இந்த முதலீட்டில் 12  முதல் 15 சதவீதம் வட்டி கிடைக்க வாய்ப்பு உண்டு. 15 சதவீதம் வட்டி கிடைத்தால் ரூ.19 லட்சம் வரை கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories