கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு: சிக்கலில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்!

Published : May 23, 2025, 01:18 PM IST

கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களைத் தவிர்க்கவும் அதிலிருந்து பயனடையவும் சில எளிய வழிமுறைகள்.லிமிட்டைக் கவனத்தில் கொண்டு, தேவையான கார்டைத் தேர்ந்தெடுத்து பில் தொகையை முழுமையாகச் செலுத்துவதன் மூலம் நிதிச் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

PREV
111
சின்ன டிப்ஸ் - பெரிய உதவி

இன்றைய சூழலில் கிரெடிட் கார்டு இல்லாதவர்களே இருக்க முடியாது என்ற நிலை உள்ளது. வங்கி கணக்கு வைத்துள்ளவர்களில் 80 சதவீதம் பேருக்கு மேல் கிரெடிட் கார்டு வைத்துள்ளார்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன. கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்களில் பாதிபேருக்கு மேல் அதனை கையாள தெரியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சில சின்ன சின்ன விஷங்களை கவனித்தால் கிரெடிட் கார்டு சிக்கல்களில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

211
லிமிட்டை தாண்ட வேண்டாம்

கிரெடிட் கார்டின் லிமிட்டை தாண்டி பயன்படுத்துபவர்களே முதலில் சிக்கலில் சிக்கி கொள்கிறார்கள். அதனை லிமிட்டைத் தெரிந்து கொண்டு அதில் 30% அளவுக்கு மட்டும் பயன்படுத்துவது நல்லது. கிரெடிட் கார்டு லிமிட்டில் 30% அளவுக்கு மட்டும் பயன்படுத்தி, முழு பில் தொகையையும் சரியான தேதியில் கட்டிவந்தால் சிபில் ஸ்கோர் அதிகரிக்கும்.

311
45 நாள்கள் மட்டுமே வட்டி இல்லை

கிரெடிட் கார்டில் கேஷ் வித்ட்ராவல் செய்யாமல் இருப்பது நல்லது. பொருளாக வாங்கினால்தான் 45 நாள்கள் வட்டி இல்லை. பணமாக எடுத்தால் எடுத்த அன்றே ஒரு கட்டணம் பிடிக்கப்படும். அன்றிலிருந்தே வட்டி, ஜி.எஸ்.டி உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

411
தேவையானதை தேர்ந்தெடுங்கள்

வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆர்வமாக முன்வந்து கொடுக்கும் ஒரு வகை கடன்தான் கிரெடிட் கார்டு. அதில் ரெகுலர், பிரீமியம், பிசினஸ், கேஷ்பேக் என ஏகப்பட்ட வகைகள் உள்ள நிலையில் நமது தேவைக்கேற்ப எது தேவையோ அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்

511
முதல் தேதியே பில் கட்ட வேண்டும்

கிரெடிட் கார்டின் பில் தொகையை அந்த மாத இறுதிக்குள் முழு தொகையையும் செலுத்தி விடுவது நல்லது. அப்போதுதான் கிரெடிட் ஸ்கோர் பாதிக்காது. மாதத்தின் முதல் நாளன்றுதான் கிரெடிட் ரிப்போர்ட் சிபிலில் பதிவு செய்யப்படும் என்பதால் பில்லை உடனே கட்டிவிடுங்கள்

611
ஆபராதம் வசூலிக்கப்படும்

நுழைவுக் கட்டணம், ஆண்டு பராமரிப்புக் கட்டணம், பில் தேதி தவறினால் வரும் தாமதக் கட்டணம், வட்டி எவ்வளவு, ஜி.எஸ்.டி எவ்வளவு என்பது போன்ற அனைத்து ‘டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்களை’யும் தெரிந்துகொள்ளுங்கள். அதன்படி கிரெடிட் கார்டைப் பயன்படுத்துங்கள்.

711
ஆசை வார்த்தையை நம்ப வேண்டாம்

பெரும்பாலான கார்டுகளுக்கு ஆண்டுக் கட்டணம் உண்டு. அதுவும் ரிவார்டு பாயின்ட்ஸ், கேஷ்பேக், டிராவல் மற்றும் ஏர்போர்ட் லவுஞ்ச் போன்ற பலன்கள் உள்ள கிரெடிட் கார்டுகளுக்கு ஆண்டுக் கட்டணம் இருக்க அதிக வாய்ப்புள்ளது. லைஃப் டைம் ஃப்ரீ கார்டு என்ற ஆசை வார்த்தையை நம்ப வேண்டாம்.

811
கூடுதல் சார்ஜ் - கவனம் தேவை

கடைகளில் பொருட்கள் வாங்கும்போது, நாம் கிரெடிட் கார்டில் பணம் செலுத்துவதாக இருந்தால் 2% கூடுதல் சார்ஜ் பிடிப்போம் என்பார்கள். அந்த சமயங்களில் அதற்குப் பதில் கிரெடிட் கார்டு யு.பி.ஐ மூலம் பணம் செலுத்திவிடலாம். ஆனால் ரூபே கிரெடிட் கார்டை மட்டும்தான் யு.பி.ஐ உடன் இணைக்க முடியும். விசா, மாஸ்டர் கார்டுகளில் அந்த வசதி இல்லை.

911
தாமதக் கட்டணம் தலை சுற்றும்

பலர் கிரெடிட் கார்டில் மினிமம் கட்டணம் செலுத்துவோருக்கு 35%-க்கும் அதிகமான வட்டி, வட்டிக்கு வட்டி, ஜி.எஸ்.டி மற்றும் கெடு தேதியைத் தாண்டினால் தாமதக் கட்டணம் எனப் பெரும் தொகை உங்கள் கிரெடிட் கார்டு பில்லில் சேர்ந்துவரும்

1011
பில்லை முழுமையாக கட்டவும்

குறைந்த கட்டணம் அல்லது இஎம்ஐ எதுவாக இருந்தாலும் அதில் வட்டி, ஜிஎஸ்டி, புராசஸிங் கட்டணம் என எல்லாமே உண்டு. எனவே, மினிமம் கட்டணம் அல்லது இஎம்ஐ ஆப்ஷனைப் பயன்படுத்தாமல் முடிந்தவரை பில் தொகையை எப்போதும் முழுமையாகக் கட்டிவிடுவதே நல்லது.

1111
மறைமுக கட்டணம் - எச்சரிக்கை

ஷாப்பிங் செய்தால் ரிவார்ட் பாயின்ட் கிடைக்கும் என என்பதால் பலர் கையில் காசு இருந்தாலும் கிரெடிட் கார்டில் பொருள்களை வாங்குவார்கள். ஆனால், சில கார்டுகளில் ரிவார்ட் பாயின்ட்டைப் பயன்படுத்தி வவுச்சர் வாங்கு வதற்கும் ஒரு கட்டணம் கட்ட வேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

Read more Photos on
click me!

Recommended Stories