Published : Sep 11, 2024, 10:57 AM ISTUpdated : Sep 11, 2024, 11:02 AM IST
தொழிலதிபர் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவியும் எழுத்தாளருமான சுதா மூர்த்தி சுமார் 775 கோடி ரூபாய் சொத்துகளை வைத்துள்ளார். ஆனால், 30 வருடமாக ஒரு புடவைகூட வாங்கவில்லை! அது ஏன் தெரியுமா?
ராஜ்யசபா எம்.பி.யும், தொழிலதிபர் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மனைவுயமான சுதா மூர்த்தி, கடந்த 30 ஆண்டுகளாக தனக்கென ஒரு சேலை கூட வாங்கவில்லை என்று சமீபத்தில் தெரிவித்துள்ளார். ஷாப்பிங் செய்வதையும் கைவிட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். கோடீஸ்வரரின் மனைவியாக இருந்தும் எப்பொழுதும் எளிமையான புடவையில் காட்சியளிக்கிறார்.
30 ஆண்டுகளுக்கு முன்பு காசிக்குச் சென்றபோது ஷாப்பிங் செய்வதைக் கைவிட்டதாக சுதா மூர்த்தி தெரிவித்திருக்கிறார். சுதா மூர்த்தியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 775 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.
25
Sudha Murthy Simplicity
"காசிக்கு செல்லும் போது, நீங்கள் மிகவும் விரும்பும் ஒன்றை விட்டுவிட வேண்டும் என்று கூறப்படுகிறது. நான் ஷாப்பிங் செய்வதை விரும்பினேன். எனவே கங்கைக்கு நான் கொடுத்த வாக்குறுதி என்னவென்றால், நான் இந்த வாழ்நாள் முழுவதும் ஷாப்பிங்கை செய்வதை விட்டுவிடுவேன் என்பதுதான்" என்று அவர் சுதா மூர்த்தி ஒரு பேட்டியில் கூறினார்.
"ஆறு வருடங்களுக்கு முன்பு என் அம்மா இறந்தபோது, அவரது அலமாரியில் 8-10 புடவைகள் மட்டுமே வைத்திருந்தார். 32 ஆண்டுகளுக்கு முன்பு என் பாட்டி இறந்தபோது, அவரிடம் நான்கு புடவைகளே இருந்தன. அவர்கள் இந்த பூமியில் இலகுவாக பயணித்தார்கள். அவளுடைய வளர்ப்பில் உருவான நான் குறைவான உடைமைகளுடன் எளிமையான வாழ்க்கையை மேற்கொள்ள எளிதாகவே கற்றுக்கொண்டேன்" என்றும் கூறியிருக்கிறார்.
35
Sudha Murthy and Narayana Murthy
அவர் தனது சகோதரிகள், நெருங்கிய நண்பர்கள், தான் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் பரிசளிக்கப்பட்ட புடவைகளையே அணிகிறார். அவருக்குப் பிடித்த புடவைகள் பற்றியும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இன்ஃபோசிஸ் அறக்கட்டளையில் பணிபுரிந்த பெண்கள் குழு அவருக்கு வழங்கிய இரண்டு எம்பிராய்டரி புடவைகள்தான் அவருக்கு மிகவும் விருப்பமானவை என்று தெரிவித்துள்ளார்.
45
Sudha Murthy Net Worth
ஆரம்பத்தில் அவரது சகோதரிகள் ஒவ்வொரு வருடமும் ஒன்றிரண்டு புடவைகளை பரிசாக அளித்தனர். பிறகு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்ததால் அதை சேகரித்து வைப்பதிலேயே சிரமம் ஏற்பட்டுவிட்டது என்றும் சொல்கிறார் சுதா மூர்த்தி. இதனால், தன்னிடம் ஏற்கனவே நிறைய புடவை இருக்கிறது என்று கூறி புதிய சேலைகளைப் பெறுவைத் தவிர்த்துவிட்டாராம்.
"நான் ஐம்பது வருடங்களாக புடவைகளை அணிந்து வருகிறேன். அணிந்த சேலையை துவைத்து, அயர்ன் செய்து பத்திரமாக வைக்கிறேன்" என்றும் கூறுகிறார்.
55
Sudha Murthy Books
சுதா மூர்த்தி பல புத்தகங்களை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ராஜ்யசபாவிற்கு உறுப்பினராகப் பதவியேற்றார். இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவரான இவர் ராஜ்யசபாவில் முதல் முறையாக உரை நிகழ்த்தினார். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முன்வைத்துப் பேசினார்.
57 உள்நாட்டு சுற்றுலா தலங்களை உலக பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுதா மூர்த்தி கேட்டுக்கொண்டார். சுதா மூர்த்தியின் இந்த முதல் உரையை பிரதமர் பாராட்டினார். "பெண்களின் ஆரோக்கியம் பற்றி விரிவாகப் பேசிய சுதா மூர்த்திக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்" என்று பிரதமர் தெரிவித்தார்.