நகர்ப்புற நுகர்வு உறுதி மற்றும் கிராமப்புற தேவை நிலைத்திருப்பது மூன்றாம் காலாண்டிலும் வளர்ச்சியை தக்க வைத்திருக்கும் வாய்ப்பு உள்ளது. விலை நிலைமையைப் பற்றி பேசும் போது, பணவீக்கம் தெளிவாகக் குறைந்து வருவதாக அறிக்கை முன்வைக்கிறது. உணவுப் பொருட்களின் விலை சரிவால், 2025 அக்டோபரில் சிபிஐ பணவீக்கம் 0.25% ஆக குறைந்தது. மழை, விநியோக நடவடிக்கைகள், மேம்பட்ட உற்பத்தி சூழல் ஆகியவை பணக்க சுமையைக் குறைத்துள்ளன. முக்கியப் பணவீக்கம் 4% மேலே இருந்தாலும், தங்கவிலை உயர்வால் ஏற்பட்டதாகவும் GST விகிதங்கள் அதன் தாக்கத்தை ஓரளவு சமன்படுத்தியதாகவும் ஆய்வு கூறுகிறது.