2025-ல் வெள்ளி விலை புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. உலகப் பொருளாதார சிக்கல்கள், வட்டி விகிதக் குறைப்பு மற்றும் தொழில்துறை தேவை அதிகரிப்பு ஆகியவை இந்த ஏற்றத்திற்குக் காரணமாகும்.
2025-ல் வெள்ளி விலை வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. தங்கத்தை விட முதலீட்டாளர்கள் வெள்ளி பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளனர். சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸின் விலை $56.78 என்ற புதிய சாதனையை எட்டியது. ஒரே நாளில் 6% உயர்ந்த இந்த விலை, சந்தையை அதிரவைத்துள்ளது. தங்கம், பங்குகள், பத்திரங்கள் உள்ளிட்ட பிற சொத்துக்களை விட, வெள்ளி இந்த ஆண்டின் மிக சக்திவாய்ந்த முதலீட்டு பொருளாக மாறிவிட்டது.
24
வெள்ளி விலை ஏற்றம்
இந்த வெள்ளி ஏற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன. உலக பொருளாதார சிக்கல்கள், வட்டி விகிதக் குறைப்பு வாய்ப்பு மற்றும் டாலர் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை முதலீட்டாளர்களை பாதுகாப்பான சொத்துக்களை நோக்கி தள்ளுகின்றன. இதுகுறித்து நிதி ஆலோசகர்கள் கூறுவதாவது, ஃபெட் வட்டி குறைப்பை சுட்டிக்காட்டியது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. இதன் விளைவாக வெள்ளி பாதுகாப்பான மற்றும் லாபகரமான வாய்ப்பாக மாறியுள்ளது.
34
நிபுணர்கள் அட்வைஸ்
வெள்ளிக்கு உள்ள பொருளாதார தேவையும் மிகப்பெரியது தான். சோலார் பேனல், மின்சாதனங்கள், பேட்டரிகள், தூய்மையான எரிசக்தி போன்ற துறைகள் அதிகளவில் உள்ளன. வெள்ளியை பயன்படுத்துகின்றன. ஆனால், உலகளவில் சுரங்க உற்பத்தி அதிகரிக்காததால், பொருள் பற்றாக்குறை உருவாகியுள்ளது. இதனால், தேவை-வழங்கல் சமநிலை வெள்ளி விலையை மேலும் தூக்கி நிறுத்துகிறது என்று கம்போஜ் விளக்குகிறது.
அடுத்த கட்ட விலை குறித்து நிபுணர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். $58 – $60 – $65 வரை உயர வாய்ப்பு உள்ளது. இது கற்பனையல்ல, உண்மையான தேவை மற்றும் குறைந்த வழங்கல் காரணமாக அவர்கள் கூறுகிறார்கள். நீண்டகாலத்திலும் வெள்ளி விலையேற்றம் தொடரும் அபாயமும் வாய்ப்பும் உள்ளது. அதனால், முதலீட்டாளர்கள் நிபுணர் ஆலோசனையின் பேரில் திட்டமிட்டு முடிவெடுக்க வேண்டும் என அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.