பாதியாக குறையப்போகுது தங்கம் விலை.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள் - காரணம் என்ன.?

Published : Apr 03, 2025, 08:30 AM ISTUpdated : Apr 03, 2025, 10:21 AM IST

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பங்குச் சந்தை நிபுணர் ஜான் மில்ஸ் தங்கம் விலை 38% வரை குறைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளார். இது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
15
பாதியாக குறையப்போகுது தங்கம் விலை.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள் - காரணம் என்ன.?

Gold Rate Down : தங்கம் என்பது ஆடம்பர பொருளாக இருந்தாலும், இந்திய மக்கள் அதிகளவு தங்கத்தை விரும்பி வாங்குகிறார்கள். விஷேச நாட்களில் தங்க நகைகளை அணிய இந்திய பெண்கள் விரும்புவார்கள். அதன் படி உலக நாடுகளிலையே இந்திய மக்களிடம் தான் அதிகளவு தங்கமானது உள்ளது. இந்த நிலையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களிலேயே சவரன் ஒன்றுக்கு 15ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

25

ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை

குறிப்பாக திருமணத்தின் போது தங்கள் பெண் குழந்தைகளுக்கு தங்கம் வாங்க திட்டமிட்டவர்களுக்கு ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலையால் கவலை அடைந்துள்ளனர். ஏழையோ, பணக்காரரோ அனைவரின் சுப நிகழ்ச்சிகளிலும் முதலிடம் பிடிப்பது தங்கம்தான். இதனால் நகைகளை வாங்குவதற்காகவே ஏற்கனவே திட்டமிட்டிருந்த பட்ஜெட்டில் கூடுதல் தொகை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

35

நகைப்பிரியர்கள் கவலை

அந்த வகையில் தங்கம் விலையானது நேற்று ஏப்ரல் 3ஆம் தேதி  கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,510-க்கு விற்பனை செய்யப்பட்டது.  சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,080-க்கும் விற்பனையானது எனவே எந்த நேரத்திலும் தங்கத்தின் விலையானது 70ஆயிரத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாக குறையக் கூடும் என பங்குச் சந்தை நிபுணர் கணித்துள்ளனர்.

45

அதிரடியாக குறையப்போகுது தங்கம் விலை

அதன் படி  அமெரிக்காவை சேர்ந்த John Mills என்ற பங்குச் சந்தை நிபுணரின் கணிப்புப்படி தற்போது யாரும் எதிர்பார்க்காத உச்சத்தை தொட்டிருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று அதிரடியாக 38% வீழ்ச்சி அடையும் என கூறியுள்ளார். மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.89,510 என்று இருந்த இந்த விலையானது  ரூ.55,496 ஆகக் குறையலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது
 

55

காத்திருக்கும் நகைப்பிரியர்கள்

தற்போதைய தங்கத்தின் விலையில்  மூன்றில் ஒரு பங்கு விலை குறைய வாய்ப்பு இருப்பதாக John Mills என்ற பங்குச் சந்தை நிபுணரின் கணிப்பு உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தங்கத்தின் விலையானது குறையும் என்ற தகவலால் நகைப்பிரியர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்துள்ளனர். 

Read more Photos on
click me!

Recommended Stories