Trump Tariffs
அமெரிக்காவின் பதில் வரி விதிப்பை எதிர்பார்த்து, இந்தியப் பொருட்கள் ஏற்றுமதியில் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. நான்கு அல்லது ஐந்து சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆனால் அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், எந்த எதிர் நடவடிக்கைகளையும் தொடங்க வாய்ப்பில்லை.
புதன்கிழமை மாலை 4 மணிக்கு (EST) அறிவிக்கப்படும் கட்டணங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்திருந்தாலும், அது எவ்வாறு அமல்படுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக, வரிகள் துறை சார்ந்ததாகவோ அல்லது நாடு சார்ந்ததாகவோ இருக்கலாம். தவிர, வெனிசுலாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மற்றும் பிற நாடுகளுக்கு இன்னொரு தனி வரி விதிப்பு முறை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பதிலடி வரிகள் கனடாவுக்கு டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலாக இருக்கலாம். ஆட்டோமொபைல் போன்ற சில துறைகளில் கடனா கூடுதலாக 25% வரி விதிப்பதன் எதிரொலியாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
US reciprocal tariffs
பதில் வரி சந்தையில் தாக்கம் செலுத்துமா?
சில நாடுகள் வழங்கும் மானியங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்படும் VAT பற்றி டிரம்ப் பேசியிருப்பதால், புதன்கிழமை அமெரிக்கா அதன் பதில் வரிகளை அறிவிக்கும்போது, வரிகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன என்பதை இந்திய அரசாங்கம் கண்காணிக்கும்.
கூடுதலாக, போட்டி நாடுகளின் மீது வரிகள் எவ்வாறு விதிக்கப்படுகின்றன என்பதையும் இந்தியா கண்காணிக்கும். பதில் வரியில் தயாரிப்பு சார்ந்த நடவடிக்கைகள் உட்பட பல காரணிகள் கவனிக்கப்படலாம்.
eciprocal tariffs are expected to impact shipments until India
பதில் வரியிலிருந்து தப்பிக்குமா இந்தியா?
அமெரிக்க அதிபர் இந்தியாவை "அதிக வரி விதிக்கும் நாடு" என்று பலமுறை குறிப்பிட்ட போதிலும், டிரம்பின் பதில் வரி நடவடிக்கையிலிருந்து தப்பிக்க இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டங்களில் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளன.
ஆனால் சமீபத்திய நாட்களில், விதிவிலக்குகள் செய்யப்படாது என்று அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தவிர, டிரம்ப் நிர்வாகத்தின் முக்கிய மையமாக இருக்கும் பண்ணைப் பொருட்கள் உட்பட இந்தியப் பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பது, இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது அமெரிக்காவுக்கு அதிக பேரம் பேசும் சக்தியை அளிக்கும் என்று என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மார்ச் மாதத்தில் பல வணிகங்கள் ஏற்றுமதியில் ஒரு ஏற்றத்தைக் கண்டுள்ளன, இருப்பினும் இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் வேறுபாடுகளை சரிசெய்யும் வரை பதில் வரிகள் ஏற்றுமதிகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
India's tariff policy
இந்தியாவின் வரிக் கொள்கை:
அமெரிக்க சந்தையில் வரி நடவடிக்கைகள் காரணமாக விலைகள் உயரும் என்பதால், வரும் மாதங்களில் தேவை பாதிக்கப்படும் என்று ஏற்றுமதியாளர்கள் அஞ்சுகின்றனர். இந்தியாவின் உத்தியின் முக்கிய அம்சம், பிற வர்த்தக ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த்தைகளை தீவிரமாக முன்னெடுப்பதுதான்.
செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், "இந்தியாவின் வரிக் கொள்கை வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துதல், உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாத்தல் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரிகள் மூலம் வருவாயை ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது," என்று கூறினார்.
"இந்தியாவின் வரிக் குறைப்புகள் உள்நாட்டு உற்பத்தியைத் தூண்டுவதையும் சர்வதேச வர்த்தக போட்டித்தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன" என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் மேலும் கூறினார்.