UPI transactions
UPI தொடர்ந்து சாதனைகளை முறியடித்து வருகிறது. மார்ச் மாதத்தில், UPI முறையில் ரூ.24.8 லட்சம் கோடி மதிப்புள்ள 1,830 கோடி பரிவர்த்தனைகள் செயல்படுத்தப்பட்டன. இது சென்ற ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது பரிவர்த்தனை எண்ணிக்கை அடிப்படையில் 36% அதிகரிப்பைக் குறிக்கிறது. பரிவர்த்தனைகளில் பண மதிப்பும் 25% உயர்ந்துள்ளது.
UPI records
பிப்ரவரி மாதத்தில் கிட்டத்தட்ட ரூ.22 லட்சம் கோடி மதிப்புள்ள 1,611 கோடி பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. இப்போது சராசரியாக, UPI மூலம் தினமும் 59 கோடி பரிவர்த்தனைகள் நடக்கின்றன.. ஒவ்வொரு நொடிக்கும் 6,800 பரிவர்த்தனைகளை UPI கையாளுகிறது, தினசரி பரிவர்த்தனை மதிப்பு ரூ.79,910 கோடி.
UPI payments
இதுவரை, ஒரு மாதத்திற்கான அதிகபட்ச பரிவர்த்தனை மதிப்பு அக்டோபர் 2024 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.23.5 லட்சம் கோடிக்கு UPI பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது பண்டிகை காலமாக இருந்தும் ஆன்லைன் விற்பனை அதிகமாக இருந்தும் எண்ணிக்கை உயர முக்கியக் காரணமாக அமைந்தன.
UPI latest update
பரிவர்த்தனை அளவின் முந்தைய உச்சம் ஜனவரி 2025 இல் இருந்தது, இது 1,700 கோடி பரிவர்த்தனைகளைக் கண்டது. 2025 நிதியாண்டின் முழு காலத்திற்கும், UPI பரிவர்த்தனைகள் மொத்தம் 18,586 கோடியாக இருந்தன, இதன் மதிப்பு ரூ.260.5 லட்சம் கோடி.
UPI transaction history
2024 நிதியாண்டில் 13,113 கோடி பரிவர்த்தனைகளில் ரூ.200 லட்சம் கோடி மதிப்பிலான பணம் பரிமாறப்பட்டது. அத்துடன் ஒப்பிடும்போது 2025 இல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காணமுடிகிறது. பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 41% மற்றும் அவற்றின் மதிப்பு 30% அதிகரித்துள்ளது.