இன்று முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய பங்குகள்.. நோட் பண்ணுங்க

Published : Aug 28, 2025, 10:58 AM IST

விடுமுறைக் காலத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியானதால், பல தாக்கம் வர்த்தகத்தில் பிரதிபலிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

PREV
15

விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்குப் பிறகு ஆன இன்று வியாழக்கிழமை பங்குச் சந்தை திறக்கும்போது, ​​முதலீட்டாளர்களின் கவனம் சில முக்கிய நிறுவனங்களின் பங்குகள் மீது இருக்கும். முதலில் டாடா ஸ்டீல் மீது கவனம் செலுத்தலாம். நிறுவனம் தனது சிங்கப்பூர் துணை நிறுவனத்தில் ரூ.3,100 கோடி முதலீடு செய்துள்ளது. பங்குகளை வாங்கிய ஒப்பந்தத்தின் மூலம் இந்த முதலீடு நடந்துள்ளது. உலகளாவிய வணிகத்தை வலுப்படுத்தும் முயற்சியாக கருதப்படும் இந்த நடவடிக்கையால், டாடா ஸ்டீல் பங்கில் மாற்றம். செவ்வாய்க்கிழமை, பங்கு 2.87% குறைந்து ரூ.155.05-ல் முடிந்தது.

25

அடுத்து எஸ்பிஐ கார்டு. இந்த நிறுவனம், ஃப்ளிப்கார்டுடன் இணைந்து புதிய கூட்டு-பிராண்டட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், மின்ட்ராவில் 7.5% வரை, ஃப்ளிப்கார்ட் மற்றும் பிற தளங்களில் 5% வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஆன்லைன் ஷாப்பிங்கை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது சலுகையாக இருக்கும் என்பதால், விடுமுறைக்குப் பிறகு பங்கு சுறுசுறுப்பாக இருக்கலாம். செவ்வாய்க்கிழமை, எஸ்பிஐ கார்டு பங்கு ரூ.815-ல் முடிந்தது.

35

ஐடி துறையில் முன்னணி நிறுவனமான TCS, சமீபத்தில் அமித் கபூரை "தலைமை AI & சேவை மாற்ற அதிகாரி" ஆக நியமித்துள்ளது. மேலும், நிறுவனம் ஒரு புதிய உலகளாவிய செயற்கை நுண்ணறிவு பிரிவையும் தொடங்கியுள்ளது. AI துறையில் அதிக முதலீடுகள் நடந்து வரும் சூழலில், இந்த அறிவிப்பு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உயர்த்தக்கூடும். செவ்வாய்க்கிழமை, பங்கு ரூ.3,157-ல் சிறிய உயர்வுடன் முடிந்தது.

45

இதனுடன், InterGlobe Aviation (இண்டிகோ ஏர்லைன்ஸ் தாய் நிறுவனம்) பங்கும் கவனத்தை ஈர்க்கிறது. இணை நிறுவனர் ராகேஷ் கங்க்வால் மற்றும் அவரது குடும்ப அறக்கட்டளை, தங்கள் 3.1% பங்குகளை விற்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் ரூ.7,000 கோடி மதிப்பில், சந்தை விலையை விட சுமார் 4% தள்ளுபடியில் நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை, பங்கு ரூ.2,603-ல் முடிந்தது.

55

மேலும், ஆயில் இந்தியா மற்றும் பிபிசிஎல், அருணாச்சலப் பிரதேசத்தில் எரிவாயு விநியோக வலையமைப்பை உருவாக்க கூட்டு முயற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் CNG நிலையங்கள் அமைத்தல், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு PNG வழங்குதல் அடங்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தி திட்டமாக இருப்பதால், இரு நிறுவனங்களின் பங்குகளும் வர்த்தகத்தில் சுறுசுறுப்பாக இருக்க வாய்ப்பு அதிகம். செவ்வாய்க்கிழமை, ஆயில் இந்தியா பங்கு ரூ.397.80, பிபிசிஎல் பங்கு ரூ.312.90-ல் முடிந்தன.

Read more Photos on
click me!

Recommended Stories