மறுபிரதி ஆதார் அட்டைக்கு பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களும் பயன்படும். முகவரிக்காக மின்சாரம், தண்ணீர் அல்லது எரிவாயு பில், வங்கி அறிக்கை, ரேஷன் கார்டு போன்றவற்றையும் காட்டலாம். ஆதார் அட்டையில் உங்கள் பிறந்த தேதியை மாற்ற வேண்டுமானால் பிறப்புச் சான்றிதழ் அல்லது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.