சிறிய முதலீட்டில் பெரிய லாபம்.. பங்குச்சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட் – எது லாபம் தரும்?

Published : Oct 28, 2025, 01:12 PM IST

நிதி நிபுணர்களின்படி, ஒரு லட்சம் ரூபாயை பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய நான்கு துறைகளில் பிரித்து முதலீடு செய்யலாம் என்று அறிவுறுத்துகின்றனர்.

PREV
16
சிறிய முதலீடு பெரிய லாபம்

பொருளாதார நிலைமைகள் அசாதாரணமாக மாறிக்கொண்டிருந்தாலும், முதலீட்டுச் சந்தையில் நம்பிக்கை இழக்கப்படவில்லை. நிதி நிபுணர்கள் கூறுவதாவது, ஒரு லட்சம் ரூபாயை நான்கு துறைகளில் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், மற்றும் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் சரியான விகிதத்தில் முதலீடு செய்தால், 2-3 ஆண்டுகளில் அது 1.7 லட்சம் முதல் 1.9 லட்சம் ரூபாய் வரை வளர வாய்ப்பு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு முதலீடுகள் மீண்டும் இந்திய சந்தைக்கு திரும்புவது, உள்நாட்டு நிறுவனங்களின் லாபம் தொடர்ந்து உயர்வது ஆகும். நிதி ஆலோசகர் சுப்ரா ரக்ஷித் இதுபற்றி கூறுவதாவது, முதலீட்டாளர்கள் இப்போது ஆரம்பித்தால், 2026-க்குள் உறுதியான வருமானம் பெற முடியும்.

26
பங்குச் சந்தை

சென்செக்ஸ் மற்றும் நிப்டி தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டிக் கொண்டிருக்கும் நிலையில், பங்குச் சந்தையில் வெளிநாட்டு நிதி வருகை மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐடி, வங்கி மற்றும் ஆட்டோ துறைகள் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஆய்வாளர்கள் அடுத்த 2 ஆண்டுகளில் சராசரியாக 12-15% வருமானம் கிடைக்கும் என மதிப்பிடுகின்றனர். சரியான பங்குகளைத் தேர்ந்தெடுத்தால் ரூ.30,000 முதலீடு 3 ஆண்டுகளில் ரூ.50,000 வரை உயரலாம். திடீர் லாபத்தை எதிர்பார்க்க வேண்டாம், திட்டமிட்ட பொறுமையோடு முதலீடு செய்யுங்கள்.

36
மியூச்சுவல் ஃபண்ட்

எஸ்ஐபி முதலீடுகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. AMFI-யின் சமீபத்திய தரவின்படி, 2025 முதல் காலாண்டில் SIP தொகை 28% உயர்ந்துள்ளது. சராசரி சராசரி வருமானம் 12-14% எனக் கருதினால், ரூ.30,000 SIP 3 ஆண்டுகளில் ரூ.52,00 வரை உயரும். சிறு மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இது நீண்டநாள் பாதுகாப்பான வழியாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

46
தங்கம்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் நிலையில் உள்ளது உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 45% உயர்வு பதிவாகியுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 20% வரை உயர வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ரூ.20,000 மதிப்பிலான தங்கம் ரூ.30,000 வரை வளரலாம். குறிப்பாக, சாவரின் தங்கப் பத்திரங்கள் (SGB) மூலம் 2.5% கூடுதல் வட்டி கிடைப்பதால் இது இன்று கவர்ச்சியான தேர்வாக உள்ளது.

56
ரியல் எஸ்டேட்

பெருந்தொற்றுக்குப் பிறகு வீட்டுத் தேவைகள் மீண்டும் உயரும் நிலையில், ரியல் எஸ்டேட் துறை மீண்டும் வருகிறது. கடந்த வருடத்தில் 8-10% வரை விலை உயர்வு பதிவாகியுள்ளது. REIT வழியாக சிறிய முதலீடுகள் செய்து நிலையான வருமானம் பெற முடியும். ரூ.20,000 முதலீடு 3 ஆண்டுகளில் ரூ.33,000 வரை வளரலாம். இது குறைந்த ஆபத்துடன் சிறந்த பணப்புழக்கத்தை தரும் துறை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

66
முதலீட்டு யோசனைகள்

பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய இந்த நான்கு துறைகளில் சமமாக முதலீடு செய்தால், ஒரே லட்சம் ரூபாய் 2-3 ஆண்டுகளில் சுமார் 70-90% வருமானம் தரக்கூடும் என்று கூறுகிறார் சுப்ரா ரக்ஷித். எந்தவொரு முதலீடும் செய்வதற்கு முன்பு நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories